பைனலுக்கு செல்லும் போட்டியாளர்கள் யார்? சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் அப்டேட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் உள்ளனர்.

ஜூன் மாதம் 28 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சியான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன்3 நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டை நடத்தி போட்டியாளர்களின் தனித்திறமைகளை வெளியே கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.
இறுதிப்போட்டியாளர்கள்: இதில், இதுவரை ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா மற்றும் ருத்ரேஷ் என நான்கு பேர் பைனலுக்கு தேர்வாகியுள்ள நிலையில் இந்த வாரம் மேலும் இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், ரவுண்டில் சிறப்பாக பாடிய கனிஷ்கர் மற்றும் நிஷாந்த் கவின் தேர்வானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிராண்ட் பினாலே: இதில் மொத்தம் 6 போட்டியாளர்களுடன் வரும் டிசம்பர் 17-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது. மேலும் நேரலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பொதுமக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











