அந்த பதவி எப்பவும் எங்க தலைவி ஜூலிக்கு மட்டுமே
சென்னை: பிக் பாஸ் 2 ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் தான் 'அந்த பதவி எப்பவும் எங்க தலைவி ஜூலிக்கு மட்டும' என்கிறார்கள்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் போலியாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. கமல் ஹாஸன் சொல்லியும் கூட அவர்கள் திருந்தவில்லை.
போலியாக இருக்காதீர்கள் என்று கவிஞர் சினேகன் அறிவுரை வழங்கியபோது அவர் மீது கோபப்பட்டனர்.
போலி
பிக் பாஸ் 2 வீட்டில் யார் இன்னும் போலியாகவே இருக்கிறார் என்று ரித்விகா பாலாஜியிடம் கேட்க அவரோ சட்டென்று டேனி என்று கூறிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. டேனி பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து நடிப்பதாக பலரும் கூறி வரும் நிலையில் பாலாஜியும் அதையே தெரிவித்துள்ளார்.
கடுப்பு
இன்னும் யாரு Fake ஆவே இருக்கா?! 🤔 என்ற தலைப்புடன் வெளியாகிய ப்ரொமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் கமெண்ட் போடத் துவங்கிவிட்டனர். எங்களிடம் ஓட்டு வாங்கி ஏமாற்றிவிட்டு இஷ்டப்பட்ட நபரை காப்பாற்றும் நீங்கள் தான் ஃபேக் என்று பலரும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜூலி
ஃபேக் பதவி எங்கள் தலைவி ஜூலியை தவிர யாருக்கும் கிடையவே கிடையாது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யம்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அடுத்தவர்களை பற்றி பேசுவது கூட போலியாகவே உள்ளதாக பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். நிகழ்ச்சி கொடூர மொக்கையாக இருப்பதாக கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











