இன்று பிக் பாஸில் இருந்து இத்தனை பேர் வெளியேற்றப்படுகிறார்களா?
சென்னை: இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேற்றப்படுகிறார் என்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா, யாஷிகா, மும்தாஜ், தாடி பாலாஜி, விஜி, ரித்விகா, ஜனனி ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஜனனி ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக செல்கிறார்.
போட்டியாளர்கள் தவிர்த்து வீட்டில் விருந்தினர்கள் உள்ளனர்.

பிக் பாஸ்
ஐஸ்வர்யா, மும்தாஜ், விஜி, ரித்விகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் ஐஸ்வர்யாவை வெளியேற்றக் கோரி மக்கள் ஓட்டு போட்டிருந்தாலும் அதை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு அவரை பிக் பாஸ் காப்பாற்றிவிடுவார் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். கடந்த வாரம் அப்படித் தானே பிக் பாஸ் தனக்கு பிடித்த ஐஸ்வர்யாவை காப்பாற்றினார்.
மும்தாஜ்
விஜி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 3 பேரில் ஒருவர் தான் இன்று வெளியேற்றப்பட வேண்டும். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுகிறார் என்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் எவிக்ஷன் கார்டில் விருந்தினர்களான சினேகன், வையாபுரி, ஆர்த்தி, காயத்ரி, சுஜா ஆகியோரின் பெயர்கள் உள்ளது.

ஏமாற்றம்
எவிக்ஷன் கார்டில் முன்னாள் போட்டியாளர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளதை பார்த்து ஏமாந்துவிட வேண்டாம். பிக் பாஸை போன்றே கமலும் கொஞ்சம் விளையாடிவிட்டு தான் உண்மையை சொல்வார். அன்பை காட்டி அழுவதற்கு பெயர் போன அம்மணி இன்று வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

வெளியேற்றம்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மும்தாஜ் தான் வெளியேறுகிறார் என்று கூறப்படுகிறது. அடிக்கடி நாமினேட் ஆவதும், காப்பாற்றப்படுவதுமாக உள்ளவர் மும்தாஜ். இந்நிலையில் அவரை தான் பிக் பாஸ் வெளியேற்றப்போவதாக பேச்சாக கிடக்கிறது. மும்தாஜ் தான் கிளம்புகிறார் என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











