பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா?: தீயாக பரவிய போட்டோ
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவர் தான் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வாரா வாரம் ஒருவரை வெளியேற்றி வருகிறார்கள். முதல் ஆளாக மமதி வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக அனந்த் வைத்தியநாதன் சென்றார். கடந்த வாரம் யாஷிகா வெளியேற்றப்படுவார் என்று நினைத்தால் நித்யாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
யாஷிகாவை வெளியேற்றுமாறு பலர் வாக்களித்தும் பிக் பாஸ் அவரை காப்பாற்றியது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

வாக்கு
இந்த வாரம் யாரை பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியே அனுப்ப விரும்புகிறீர்கள் என்று கேட்டு பார்வையாளர்களை வாக்களிக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால் பார்வையாளர்களோ ஆமா, நாங்க ஓட்டு போடுவோம், கடைசியில் நீங்க உங்களுக்கு இஷ்டமானவரை தான் வெளியே அனுப்புவீர்கள். அதற்கு நாங்கள் எதற்காக ஓட்டு போட வேண்டும் என்று கோபித்துக் கொண்டனர்.
ரம்யா
இந்த வாரம் ஐஸ்வர்யாவை வெளியேற்றவே பார்வையாளர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் ரம்யா வெளியேற்றப்படுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதை பார்த்த பார்வையாளர்களோ, வாரா வாரம் எங்களை ஏமாற்றி வேடிக்கை பார்ப்பதே இந்த பிக் பாஸுக்கு வேலையாகிவிட்டது என்று குமுகிறார்கள்.

கலாச்சாரம்
பிக் பாஸ் நிகழ்ச்சி நம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பலர் குறை கூறினாலும் அதை இரவில் பார்த்துவிட்டு பகலில் சமூக வலைதளங்களில் கருத்து தெரவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களிடம் வாக்களிக்குமாறு கூறுகிறார்கள்.

பிக் பாஸ்
நமக்கு ஐஸ்வர்யாவை வெளியேற்ற வேண்டும். ஆனால் பிக் பாஸ் அவரை வெளியேற்ற மாட்டார். அவரையும், யாஷிகாவையும் வைத்து தான் இளம் பார்வையாளர்களை ஈர்க்க பிக் பாஸ் திட்டமிட்டுள்ளார். நீங்கள் வேண்டுமானால் பாருங்க இந்த வாரம் ஐஸ்வர்யா எலிமினேட் ஆக மாட்டார் என்று நெட்டிசன்ஸ் சொல்லியது போன்று தான் நடக்கும் போல.


Click it and Unblock the Notifications











