குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா? பரிசுத்தொகை இத்தனை லட்சங்களா?.. அடேங்கப்பா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது குக் வித் கோமாளி சீசன் 3.

ஏராளமான டாஸ்க்குகள் மற்றும் சிறப்பான கோமாளிகளின் சேட்டைகள் என ஒவ்வொரு வாரமும் ரசிகர்களை சந்தித்தது குக் வித்து கோமாளி சீசன் 3.

தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று பிற்பகல் இதன் பிரம்மாண்ட இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3

குக் வித் கோமாளி சீசன் 3

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிறப்பான அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடுத்தடுத்து வித்தியாசமான டாஸ்க்குகள், கோமாளிகளின் சேட்டைகள் உள்ளிட்டவற்றுடன் இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் ரசிகர்களை சந்தித்து வந்தது.

ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி

ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரசிகர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்துவந்த இந்த நிகழ்ச்சியில் நடுவர்களும் கோமாளிகளுடன் இணைந்து போட்டியாளர்களை கலாய்க்கும் செயலை செய்து வந்தனர். கோமாளிகளும் நடுவர்களின் பிடியில் சிக்கி வதைப்படுவதை பார்ப்பது மிகவும் சிறப்பாக இருந்து வந்தது.

பிரம்மாண்டமான இறுதிப்போட்டி

பிரம்மாண்டமான இறுதிப்போட்டி

இதில் ஒவ்வொரு வாரமும் பல டாஸ்க்குகளை முறியடித்து அடுத்தடுத்த கட்டங்களை கடந்த போட்டியாளர்கள் தற்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். அவ்வாறு இல்லாமல் குக்கிங்கில் செய்த தவறுகளால் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆன சோகங்களும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

அடுத்தடுத்த எலிமினேஷன்கள்

அடுத்தடுத்த எலிமினேஷன்கள்

இந்த எலிமினேஷனில் சிக்கி கிரேஸ் கருணாஸ் உள்ளிட்டவர்களும் வெளியேறினர். இந்நிலையில் தற்போது இந்த இறுதிப்போட்டியில் ஸ்ருதிகா, அம்மு அபிராமி, தர்ஷன் மற்றும் வித்யூலேகா என நான்கு போட்டியாளர்கள் நேரடியாக முன்னேறியுள்ளனர். வைல்ட் கார்ட் ரவுண்டில் வெற்றிபெற்ற கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப்பும் தற்போது இறுதிப்போட்டியில் போட்டியிடவுள்ளனர்.

பிரம்மாண்டமான இறுதிப்போட்டி

பிரம்மாண்டமான இறுதிப்போட்டி

இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி துவங்கி நடைபெறவுள்ளது. இதில் இந்த 6 போட்டியாளர்களும் பங்கேற்கவுள்ளனர். இறுதிப்போட்டியையொட்டி இவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் மிகவும் கடுமையானதாக காணப்படுகின்றன. இதை தற்போது அடுத்தடுத்து வெளியாகிவரும் ப்ரமோக்களில் பார்க்க முடிகிறது.

டைட்டில் வின்னர் யார்?

டைட்டில் வின்னர் யார்?

கடந்த சில வாரங்களாக ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துவந்த இந்த நிகழ்ச்சி நிறைவடைவது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ள போதிலும் டைட்டில் வின்னர் குறித்து அறிந்துக் கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பே இதன் சூட்டிங் நடைபெற்று முடிந்தபோதிலும் டைட்டில் வின்னர் குறித்த தகவலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.

டைட்டிலை வென்றது ஸ்ருதிகாவா?

டைட்டிலை வென்றது ஸ்ருதிகாவா?

ஆனால் நடிகை ஸ்ருதிகாதான் டைட்டில் வின்னர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களை யாரெல்லாம் பிடித்துள்ளனர் என்பதை நிகழ்ச்சியின் ஒளிபரப்பில்தான் பார்க்க முடியும். இந்நிலையில் இந்த டைட்டில் வின்னருக்கு எவ்வளவு பரிசுத்தொகை கொடுக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ரூ.10 லட்சம் பரிசுத்தொகை?

ரூ.10 லட்சம் பரிசுத்தொகை?

கடந்த சீசன்களில் டைட்டிலை வனிதா விஜய்குமார் மற்றும் கனி வென்றனர். அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த 3வது சீசனில் டைட்டில் வின்னருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்து இன்றைய இறுதிப்போட்டிக்கான எபிசோடில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X