பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை சரியாக செய்தது யார்?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை சரியாக செய்தது யார் என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. கிராமத்து மண் மனத்துடன் பிக்பாஸ் வீடு இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்கள் அனைவரும் கிராமத்து மனம் கமழ உடையணிந்திருந்தனர்.
அவர்களின் மேக்கப்பும் பேச்சு ஸ்லாங்கும் ரசிக்கும் வகையில் கிராமத்து வாசனையை வெளிப்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை மதுமிதா, சேரன், ரேஷ்மா, ஆகியோர் சிறப்பாக செய்தனர்.

மீராதான் பெஸ்ட்
இந்நிலையில் நேற்று லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் யார் சிறப்பாக செய்தது என்று பிக்பாஸ் கேட்க, மீராவின் பெயரை கூறினர் லாஸ்லியா, அபிராமி, கவின், ரேஷ்மா, சரவணன் ஆகியோர்.

தர்ஷனை கட்டிப்பிடித்து
சொல்லப்போனால் டாஸ்க்கை மிக கேவலமாக செய்தவர் மீராதான். அடிக்கடி தனிப்பட்ட பிரச்சனைகளை கொண்டு வந்து விளையாட்டின் போக்கை மாற்றினார். தனது காதலை ஏற்றுக்கொள்ள தர்ஷனை, டாஸ்க்கின் போது மகன் என்று கூறி, கட்டிப்பிடித்தார் சாப்பாடு ஊட்டிவிட்டார், தர்ஷனின் மடியில் படுத்தார்.

சொதப்பியவர் மீரா
இப்படி டாஸ்க்கில் தாய் என்றதையும் மீறி தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார் மீரா. சேரனுடன் அடிக்கடி பிரச்சனை மதுமிதாவுடன் ஒரு முறை பிரச்சனை என டாஸ்க்கை சொதப்பியவர் மீரா. ஆனால் அவர் பெஸ்ட் பர்ஃபாமராக தேர்வு செய்யப்பட்டார்.

அப்லாஸ்க்குரிய மது
உண்மையில் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டது மதுமிதாதான். சாண்டியுடனான சண்டையை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேரக்டராகவே இருந்தவர் மதுமிதா. அவர் பேசிய விதம், நடந்து கொண்ட விதம் என எல்லாமே அப்லாஸ்க்குரியதுதான்.

நியாயப்படி மதுமிதாதான்
டாஸ்க்கில் சேரனின் முன்னாள் காதலி மதுமிதாதான் என தெரியவரும் போதும், லாஸ்லியா தங்களின் மகள் என்று கூறும் போது மதுமிதா கொடுத்த எக்ஸ்பிரஷன்கள்.. ஆகா. நியாயப்படி மதுமிதாவைதான் பெஸ்ட் பர்ஃபாமர் என்று செலக்ட் செய்திருக்க வேண்டும்.

ஜீரணிக்க முடியாத காமெடி
அவருக்கு அடுத்தபடியாக சேரனும் தனது டாஸ்க்கை சிறப்பாக செய்தார். ரேஷ்மாவும் தான் ஒரு திருடி என்பது தெரியாத வகையில் நடந்துகொண்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சில வாத்து முட்டைகள் மீராவை பெஸ்ட் பர்ஃபார்மர் என்று கூறியதுதான் ஜீரணிக்க முடியாத காமெடி.


Click it and Unblock the Notifications











