ஐஸ், யாஷிகா அல்ல உண்மையிலேயே மகத்தை விரட்டிவிட்டது யார் தெரியுமா?

By Siva

Recommended Video

சிம்புவை தொடர்ந்து மஹத்தை வெளுத்து வாங்கும் நடிகர்கள்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து மகத் வெளியேற உண்மையான காரணம் யார் தெரியுமா?

பிக் பாஸ் 2 வீட்டில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார் மகத். இதை புரிந்து கொண்ட யாஷிகா காதல் என்ற பெயரிலும், ஐஸ்வர்யா நட்பு என்ற பெயரிலும் அவரை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்.

மகத்தும் அவர்கள் ஆட்டி வைத்தபடி எல்லாம் ஆடினார்.

மகத்

மகத்

மகத் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார் என்று பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் 3 பேர். அது யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மும்தாஜ். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மும்தாஜ் தான் மகத்தின் பலவீனத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

மும்தாஜ்

மும்தாஜ்

மகத்தை கடுப்பேற்றி விட்ட பெருமை மும்தாஜையே சேரும். தான் சாந்தமாக சிரித்துக் கொண்டே இருந்தால் அதை பார்த்து மகத்துக்கு வெறி ஏறுகிறது என்பதை புரிந்து கொண்டார் மும்தாஜ். அதன்படி மகத் கோபப்படும் போது எல்லாம் சிரித்து சிரித்து அவருக்கு வெறி ஏற வைத்தார். மகத்தும் மும்தாஜின் சிரிப்பை பார்த்து மேலும் கடுப்பாகி பேய் கத்து கத்தினார்.

யாஷிகா

யாஷிகா

மும்தாஜை பார்த்து கேவலமாக பேசி பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார் மகத். அவ, இவ, அந்த பொம்பள கெட்டவ என்று மரியாதை இல்லாமல் பேசிய மகத் பார்வையாளர்களுக்கு கொடூர வில்லனாக தெரிந்தார். மும்தாஜ் பதில் பேசாமல் சிரித்து சிரித்து சமாளித்ததால் ச்சே, மகத் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்தும் இவர் இப்படி தன்மையாக இருக்கிறாரே என்று பலருக்கும் தோன்றியது. ஏன், கமல் ஹாஸனுக்கே அப்படித் தோன்றியதால் தான் மகத்தை தாளித்து எடுத்ததுடன் மும்தாஜை பாராட்டினார்.

வெற்றி

வெற்றி

பிக் பாஸ் 2 வீட்டில் வெற்றி பெற பலரும் பல வியூகம் வைத்துள்ளனர். மும்தாஜின் வியூகம் அடுத்தவர்களின் பலவீனத்தை தெரிந்து அதை குறி வைப்பது தான். சத்தம் போட்டு காரியம் சாதிக்க முடியாது என்பதை அவர் தற்போது புரிந்து வைத்துள்ளார். அதனால் அமைதியாக இருந்து மிகவும் எச்சரிக்கையுடன் காய் நகர்த்துகிறார் மும்தாஜ். இது புரியாமல் பாவம் மகத் கோபப்பட்டு கண்டபடி பேசி வெளியேறிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X