Tamil selvi serial: அவன் என்ன கொம்பனா தும்பனா? இப்படி தப்பிச்சு பறக்கறான்!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் உங்களுக்கு வேறு வழியில், அல்லது படிப்பை மையமாக வைத்து கதை கொண்டு போகத் தெரியவில்லையா? படிக்கற பெண்ணை சும்மா பயமுறுத்திக் கொண்டே கதையை கொண்டு செல்கிறீர்கள்...
கொம்பன் தப்பிச்சுட்டான்னு சீரியல் ஆரம்பிச்சதில் இருந்து, டவுனுக்கு படிக்கப் போன தமிழ்ச் செல்வியை பயமுறுத்தி கதையை கொண்டு போனீங்க. பார்த்தால் அவன் தமிச்செல்வி வரலேன்னு அவள் தங்கச்சி மல்லிகாவை கடத்தி கொண்டு போயி ஒரு வாரம் காடு மேடு மலைன்னு சுத்தறான்.
தமிழ்ச்செல்வி கல்லூரி ஹாஸ்டல் வார்டனிடம் பர்மிஷன் கேட்டுட்டு வந்து படிப்பை விட்டுட்டு , தோழிகளுடன் வந்து, மல்லிகாவை காப்பாத்திட்டு, கொம்பனை போலீசில் ஒப்படைச்சுட்டு போனா. இப்போது மறுபடியும் தமிழ்ச்செல்வியை பயமுறுத்தறாங்க.

கதை இதுதானா?
பெண் கல்வியை மையப்படுத்தி ஒரு சீரியல் அதுவும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகுதுன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. பார்த்தால்,கொம்பனாம், அவனுக்கு பொண்டாட்டி புள்ளைங்க இருக்குதாம். பள்ளிக் கூடத்தில் பாடம் நடத்திய வாத்தியாரை கொலை செய்துட்டானாம்.போலீஸ் அவனை அழைச்சுக்கிட்டு போறதுக்குள்ள தமிழ்ச்செல்வி பாடம் சொல்லிக் குடுக்கற வாத்தியாரை தெய்வத்துக்கு மேலன்னு சொல்லுவாங்க. அவரை போயி கொலை செய்திருக்கியேன்னு தூன்னு துப்பிடறா.

கொம்பனுக்கு பகை
அன்னைக்கு ஆரம்பிக்குது கொம்பனுக்கு பகை. ஆனால், ஜெயிலில் மாட்டிய கொம்பன் தப்பிச்சு வந்துதான் இத்தனை ஆட்டம் போட்டான். மல்லிகாவை கடத்தி வச்சுக்கிட்டு, கல்யாணம் செய்துக்கப் போறதா மிரட்டினான். அதற்குள் தமிழ்ச்செல்வி வந்து தங்கச்சியை காப்பாத்தி, அவளோட பிறந்த நாளையும் கொண்டாடிட்டு கல்லூரிக்குப் போகிறாள். பாவம் பெண் பிள்ளைகளை வெகு தூரம் பள்ளிக்கு அனுப்பிட்டு பெற்றோர்கள் பயம் கொள்ளும் விதத்தில் கடந்த ஒரு வாரம் தமிழ்ச்செல்வி சீரியல் ரொம்ப கசப்பானதாக ஒளிபரப்பாகிட்டு இருந்துச்சு.

தமிழ்ச்செல்வி சரவணன்
தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு போயிட்டாளா இல்லையான்னு கேட்கத்தான் அவளின் ஆசை மாமன் சரவணன் போன் செய்யறான்னு நினைச்சால், ஆசையா பேசினவன் கொம்பன் தப்பிச்சுட்டானாம் தமிழ்ச்செல்வி ஜாக்கிரதையா இருந்துக்கோன்னு சொல்றான். என்னங்கடா அநியாயம் பண்றீங்க? போலீஸ் ஸ்டேஷனா இல்லை அது ரயில்வே பார்க் ஸ்டேஷனா? போலீசையும் அசிங்கப் படுத்தறீங்க...

கொம்பன் தப்பிச்சுட்டான்னு
கொம்பன் தப்பிச்சுட்டான் தமிழ்ச்செல்வி, நீ ஜாக்கிரதையா இருந்துக்கோன்னு சொல்றான். இங்கே வந்து என்னை அவன் ஒண்ணும் செய்ய முடியாது மாமா. இங்கே செக்கியூரிட்டி எல்லாம் இருக்காங்க. நீங்க பயப்படாதீங்கன்னு சொல்றா தமிழ்ச்செல்வி. இப்படித் தப்பிச்சு ஓடற அளவுக்கு சிறைச் சாலையை ரொம்ப மொக்கைனு நினைச்சு கதை எழுதுவீங்களா? பெண் கல்வி முக்கியத்துவம் பத்தின கதை இல்லையா இது? போலீசை மொக்கை பண்றது, ரவுடியிசம் இதுதானா கதை?
அடி ஆத்தி தமிழ்ச்செல்வி கலெக்டரா வருவா,அப்படி இப்படின்னு நினைச்சு ஏமாந்து போயிட்டோமா?


Click it and Unblock the Notifications











