அழகா மட்டுமில்ல... 2014ல் அதிகமா அழுத கதாநாயகிகள் இவங்கதான்!

By Mayura Akilan

கதாநாயகிகள் என்றாலே அழகு,இளமை ஆகியவை முக்கிய தகுதிகள். நன்றாக நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கூடுதல் தகுதி. ஆனால் டிவி சீரியலைப் பொருத்தவரைக்கும் அழகும் இளமையும் இருந்தால் மட்டும் போதாது கொடுக்கிற காசை விட கூவி கூவி அழவேண்டும் அதுதான் ரொம்ப முக்கியம்.

சீரியலின் முதல் எபிசோடில் அழகுதேவதையாய் ஜொலித்த நாயகிகள், புரட்சி வசனம் பேசும் நாயகிகள் கூட 100 எபிசோடுகளுக்குமேல் கண்ணீரை குடம் குடமாய் ஊற்ற வேண்டும் அப்போதுதான் இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடம் பெறமுடியும். சீரியல் டி.ஆர்.பியும் சூடுபிடிக்கும்.

சத்யாவின் அழுகையும்,துளசியின் கண்ணீரும்தான் ஒரு சீரியலை ஆயிரம் எபிசோடுகளைத் தொட வைக்கிறது. 2014ஆம் ஆண்டில் அதிக அழகாகவும் கூடவே அழுகாச்சியுமாக வீட்டிற்குள் வந்துபோன நாயகிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

வாணி போஜன்

வாணி போஜன்

ஏர்ஹோஸ்டசாக வானில் பறந்த இந்த நாயகி விளம்பர மாடலாக சின்னத்திரைக்குள் நுழைந்தார். தெய்வமகள் தொடர் மூலம் சீரியலுக்கு சத்யாவாக அறிமுகமாகி, இன்றைக்கு வாணிபோஜன் என்பதை விட சத்யா என்ற பெயர்தான் அனைவருக்கும் பரிட்சயம். ஆரம்பத்தில் வீர வசனம் பேசிய இந்த நாயகி இப்போது குடம் குடமாய் கண்ணீர் வடிக்கிறார்.

தங்கமீனாட்சி

தங்கமீனாட்சி

சரவணன் மீனாட்சியில் தங்கமீனாட்சியாக வரும் ரக்ஷிதா, இளவரசியில் மகாலட்சுமியாக சன் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளின் மனதில் நுழைந்தவர். இப்போதோ தங்க மீனாட்சியாக துடுக்குத்தனமான நடிப்பினால் கவர்ந்தாலும் அந்த அழகு கண்களில் கண்ணீர் வழியும் போது இல்லத்தரசிகளும் கலங்கித்தான் போகின்றனர்.

பூஜா

பூஜா

துறு துறு நடிப்பால் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தவர் பூஜா. வாணி ராணியில் கவுதமை விரட்டி விரட்டி காதலித்து கல்யாணம் செய்து கொண்டாலும் கண்ணீரும் கம்பலையுமாக இப்போது கவுதமை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார் இந்த குட்டிப்பெண் பூஜா.

கல்யாணி

கல்யாணி

அண்ணன் மேல் அதீத பாசம் கொண்ட ஆண்டாளாய் நடித்துள்ள கல்யாணி, தாயுமானவனில் தில் பெண்ணாய் நடித்த கல்யாணி இப்போதோ ஆண்டாளாய் அழுது வடிகிறார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாய் வந்து, பைரவி பேய் தொடரில் நடித்து வரும் ஐஸ்வர்யா, சிலகாலம் மகாபாரதம் தொடரில் பாஞ்சாலியாய் கண்ணீர் விட்டார்.

நேகா

நேகா

மதிய நேரத்தில் சன்டிவியில் கொஞ்சமாவது சுறுசுறுப்பாய் சீரியலை போடாமல் ஆரம்பம் முதலே கண்ணீரும் கம்பலையுமாய் வந்து போகிறார் இந்த நேகா.

நீலிமா ராணி

நீலிமா ராணி

டிவி சீரியலே வேண்டாம் என்று கும்பிடு போட்டுவிட்டு சினிமாவிற்கு போனார் இந்த நாயகி. மீண்டும் மகாபாரதம் மூலம் சீரியலுக்கு வந்த நீலிமா ராணி, வாணி ராணி, தாமரை சீரியலில் கூடுதல் அழகோடு கண்ணீர் விட வந்து விட்டார்.

பூமிகா

பூமிகா

காட்டுவாசி பெண்ணாய் கலக்கி வரும் பூமிகா, மச்சான் மச்சான் என்று வம்சம் தொடரில் கொஞ்சினாலும், அழகு கண்களில் கண்ணீர் விட தவறுவதில்லை.

ஸ்வேதா

ஸ்வேதா

சினிமாவில் இருந்து சந்திரலேகா தொடர்மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஸ்வேதா. அதிரடியாய் நடித்தாலும், அவ்வப்போது கண்ணீர் விட தவறுவதில்லை.

ரேஷ்மா

ரேஷ்மா

வாணி ராணியில் வில்லியாய் வந்து வம்சம் தொடரில் டாக்டராய் நடிக்கும் ரேஷ்மா, தெலுங்கு பெண். ஆனாலும் தமிழ் சீரியலுக்கு ஏற்ப கூடுதல் எமோசனல் காட்ட தவறுவதில்லை.

மகாலட்சுமி

மகாலட்சுமி

தொகுப்பாளினியாய் உள்ளம் கவர்ந்த மகாலட்சுமி, ராதிகாவின் சீரியல்களில் சின்னத்திரைக்குள் வந்தார். வில்லி, சுட்டிப்பெண் என பலமுகங்களில் துறுதுறு நடிப்பை வெளிப்படும் மகாலட்சுமி, கொஞ்சம் கூடுதலாகவே அழுகிறார்.

ப்ரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர்

விஜய் டிவியின் புதிய வரவு ப்ரியா பவானிசங்கர். புதிய தலைமுறை டிவியின் அழகு செய்திவாசிப்பாளர். இப்போதோ கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க (அழ) வந்திருக்கிறார்

மனீஷா

மனீஷா

மும்பையில் இருந்து விளம்பரம், சினிமாவிற்குதான் கதாநாயகிகளை இறக்குமதி செய்வார்கள். முதன் முதலாக சீரியலில் ஹீரோயினாக வந்துள்ளார் இந்த மும்பைப் பெண். ஆனால் என்ன அழகாய் இருந்தாலும் இவரும் அழுது வடிகிறார்.

நிகிலா ராவ்

நிகிலா ராவ்

தெலுங்குப் பெண் நிகிலா ஆரம்பத்தில் என்னவோ அழவில்லை. என்றைக்கு ராஜேசை திருமணம் செய்தாரோ அன்றுமுதல் அவ்வளவுதான் ஒரே அழுகாச்சிதான் போங்கள்.

மதுமிலா

மதுமிலா

அழகுப் பெண் மதுமிலா மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வந்து இப்போது சீரியலில் கலக்கி வருகிறார். ஆபிஸ் தொடரில் அவ்வளவாக அழவில்லை என்றாலும் தாயுமானவன் தொடரில் தாறுமாறாக அழுது குவித்தார்.

தேசிகா ஸ்ரீ

தேசிகா ஸ்ரீ

பொம்மலாட்டம் தொடரில் பாரதியாய் புரட்சி வசனம் பேசும் தேசிகா ஸ்ரீ, கணவன் ஸ்ரீ உடனான சண்டையில் அவ்வப்போது கண்ணீர் விட்டு கதறாமல் இல்லை.

ரம்யா

ரம்யா

சரவணன் மீனாட்சியில் நடித்த ரம்யா, ஆண்டாள் அழகரில் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். கொஞ்சம் தில்லான கதாபாத்திரம்தான். இனி இவர் எப்படி அழுகிறார் என்று போக போகத் தெரியும்.

ஸ்ருதிகா

ஸ்ருதிகா

மூன்று ஆண்டுகளுக்கு மேல் நாதஸ்வரம் தொடரில் மலராக மக்கள் மனதில் நுழைந்த ஸ்ருதிகா, ஜீ தமிழில் உயிர் மெய் தொடரிலும் இப்போது நடித்து வருகிறார். கணவருடன் சண்டை போடாவிட்டாலும், மாமியாருடனான பிரச்சினையில் கண்ணீர் விடத் தவறுவதில்லை. இந்த ஆண்டோடு இவர் கண்ணீருக்கு விடை கொடுப்பார்களா? இல்லை 2015ஆம் ஆண்டிலும் இவர் கண்ணீர் விடுவாரா பார்க்கலாம்.

ஸ்ருதி

ஸ்ருதி

ஆயிரத்து 500 எபிசோடுகளை தொடப்போகும் தென்றல் தொடரில் துளசியாக நடிக்கும் ஸ்ருதி ஆபிஸ் தொடரில் ராஜியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் அழுது சாதனை படைத்தவர் இவராகத்தான் இருக்கும். 2014ஆம் ஆண்டில் அழுதாலும் அழகாய் இருக்கும் உங்கள் மனம் கவர்ந்த நாயகி யார் சொல்லுங்கள் டிவி ரசிகர்களே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X