பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யாருன்னு மக்களுக்கு தெரிஞ்சுடுச்சுடோய்
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்பது நெட்டிசன்களுக்கு தெரிந்துவிட்டது.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் டேனி, தாடி பாலாஜி, ஜனனி ஆகிய 3 பேரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுகிறார். ஐஸ்வர்யா போனால் பார்வையாளர்கள் சந்தோஷப்படுவார்கள், ஆனால் அது நடக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் எவிக்ஷன் குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ரித்விகா
வெற்றியை தூரமாக நின்று ரசித்ததாக ரித்விகாவும், இதுவரை எதிலும் ஃபர்ஸ்ட் வந்தது இல்லை என்று சென்றாயனும் கமலிடம் உருக்கமாக தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
எவிக்ஷன்
ஜனனி, தாடி பாலாஜி, டேனி ஆகிய மூன்று பேரில் ஒருவர் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அது நிச்சயமாக டேனி தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
ட்வீட்
இன்று இரவு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது டேனி தான் என்று அடித்துக் கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.
புறம்
டேனியை வெளியேற்றுமாறு பார்வையாளர்கள் பல வாரமாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் அது நடந்தாலும் சந்தோஷம் தான். ஏற்கனவே டேனிக்கு bye சொல்லி ட்வீட் செய்யத் துவங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











