என்னது லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்ல மீரா பெஸ்ட் பர்ஃபார்மரா? இது யார் வேலை... சரவணன் பார்த்ததா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பெஸ்ட் பர்ஃபார்மர் என மீராவின் பெயர் கூறப்பட்டதாக தெரிகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக பிக்பாஸ் வீடு பாம்பு பட்டி கீரிப்பட்டி என இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டது.
ஊர் தலைவர்களாக ஒரு கிராமத்திற்கு மதுமிதாவும் மற்றொரு கிராமத்திற்கு சேரனும் அறிவிக்கப்பட்டனர். இந்த டாஸ்க்கில் பேச்சு, ஸ்லாங், எக்ஸ்பிரஷன், டான்ஸ் என அனைத்திலும் சிறப்பாக செய்தவர் மதுமிதா.

பெஸ்ட் பர்ஃபார்மர்
மதுமிதாவின் நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது. இந்நிலையில் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்வு செய்யுமாறு பிக்பாஸ் கூறியிருப்பார் போல.

மீராவுக்கு எதிர்ப்பு
அதற்கு யாரோ மீராவின் பெயரை சொல்லியிருப்பார்கள் என தெரிகிறது. இதற்கு மதுமிதா, சேரன், சாக்ஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சேரன் கேள்வி
அப்போது மொழி கலாச்சாரம் என்ற ஆயுதங்களை எடுத்துள்ளார் மீரா. இதனால் சாக்ஷியும் ஷெரினும் காண்டாகியுள்ளனர். எந்த அடிப்படையில் மீரா பெயர் பெஸ்ட் பர்ஃபார்மர் என வந்தது என்று சேரன் கேள்விக் கேட்கிறார்.

மீராவுடன் நெருக்கம்
இதுதொடர்பான பிரச்சனைதான் இன்று பிக்பாஸ் வீட்டில் வெடிக்கப்போகிறது. இதில் கவின், சாண்டி, சரவணன் ஆகியோர்தான் மீராவின் பெயரை சொல்லியிருப்பார்கள் என தெரிகிறது. ஏனெனில் மதுமிதா விட்ட ரெய்டில் நொந்து போயிருக்கின்றனர் கவினும் சாண்டியும். அதே நேரத்தில் சரவணன் தற்போது மீராவுடன் நெருக்கமாக உள்ளார்.

மூன்று நாளுமே பிரச்சனை
இதன் காரணமாக அவர்கள் மீராவின் பெயரை சொல்லியிருப்பார்கள் என தெரிகிறது. டாஸ்க் நடந்த மூன்று நாளுமே விதவிதமாக பிரச்சனை செய்தவர் மீரா. டாஸ்க்கின் கடைசி நாளான நேற்று சேரன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி ஸ்ட்ராங்காக ஒரு பிட்டை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











