10 கோடி ஓட்ட அள்ளி போட்டு பவர காட்டிட்டிங்க.. வெளியேறப்போவது யார்? இரவு வருகிறார் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியாக ஹவுஸ் மேட்ஸ்களை சந்திக்கவுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 23ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று சனிக்கிமை என்பதால் கமல்ஹாசன் வரும் புரமோவை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

காட்டுத்தனமா காட்டிட்டாங்க
இன்று கமல் பங்கேற்கும் எபிசோடின் புரமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் உண்மை முகங்களை காட்ட சொன்னால் அதுக்காக இப்படியா.. காட்டுத்தனமா காட்டிட்டாங்க.. 7 பேர நாமினேட் வேற பண்ணி வச்சுருக்காங்க.

பவர காட்டிட்டிங்க
அவங்கதான் அப்படின்னா நீங்க 10 கோடி வோட்ட போட்டு உங்க பவர காட்டிட்டிங்க.. உங்களின் முதல் தீர்ப்பு என்ன? இன்று இரவு தெரியும் என கமல் கூறுவது போல் உள்ளது அந்த புரமோ.

முழு காரணம்
கடந்த சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் ஆரம்பித்த உடனேயே விறுவிறுப்பை கூட்டிவிட்டது. இதற்கு முழு காரணமும் வனிதாதான்.

ஆடும் ஆட்டம்
அவர் மூட்டி விட்ட சண்டைகளால்தான் பிக்பாஸ் வீடே பற்றி எரிகிறது. போதா குறைக்கு சாக்ஷியும் அபிராமியும் ஆடும் ஆட்டம் அப்பப்பா தாங்க முடியவில்லை.

நாமினேஷன் லிஸ்ட்
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். கவின், மதுமிதா, சேரன், சரவணன், சாக்ஷி, ஃபாத்திமா பாபு, மீரா மிதுன் உள்ளிட்டோர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

சாக்ஷி வெளியேற வேண்டும்
நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்களில் கவினும், சாக்ஷியும் மக்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சாக்ஷி வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. சாக்ஷிதான் முதலில் வெளியேற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகவும் உள்ளது.

வெளியேறப்போவது யார்?
அதேநேரத்தில் சாக்ஷிக்கு குறும்படம் போட வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று இரவு தெரிந்துவிடும் யாரின் முகத்திரை கிழிபட போகிறது? பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்? என்பது.


Click it and Unblock the Notifications