இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவர்தானாமே?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 60 நாட்களை கடந்து நிகழ்ச்சி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வாரம் தோறும் ஒவ்வொரு போட்டியாளர் மக்கள் வாக்களிப்பின் அடிப்படையில் வெளியேற்றப்படுகின்றனர்.

வைல்டு கார்டு என்ட்ரி
இதில் சரணவன் எதிர்பாராதவிதமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து நடிகை கஸ்தூரியும், ஏற்கனவே பங்கேற்று வெளியேற்றப்பட்ட வனிதாவும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தனர்.

மதுமிதா வெளியேற்றம்
இந்நிலையில் மதுமிதாவும் எதிர்பாராத விதமாக தற்கொலை முயற்சி செய்து பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அபிராமி வழக்கமான எவிக்ஷன் புராசஸின் படி வெளியேற்றப்பட்டார்.

முதல் வாரத்திலேயே நாமினேஷன்
கஸ்தூரி நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்து கொடுத்த கமென்ட்டால் அவர் மீது பிக்பாஸ் வீட்டினர் கடுப்பில் இருந்தனர். இதனால் வந்த இரண்டாவது வாரத்திலேயே அவர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்து விட்டார்.

கடுமையான போட்டியாளர்கள்
கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நாமினேஷனில் கஸ்தூரி, சேரன், சாண்டி, தர்ஷன் ஆகிய நான்கு பேரின் பெயர்களும் இடம்பெற்றன. தர்ஷன், சாண்டி, சேரன் ஆகியோர் கடுமையான போட்டியாளர்கள் என்பதால் அவர்கள் வெளியேற மாட்டார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கஸ்தூரி வெளியேற்றப்படலாம்
அதே நேரத்தில் கஸ்தூரி குறித்து முழுமையாக தெரிவதற்குள் அவர் நாமினேஷன் லிஸ்ட்டிற்கு வந்துவிட்டதால் அவருக்கு வாக்குகள் குறைவாக விழும் என்றும், இதன் காரணமாக கஸ்தூரி வெளியேற்றப்படலாம் என்று தகவல் வெளியானது.

நம்ப தகுந்த தகவல்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து கஸ்தூரிதான் இந்த வாரம் வெளியேற்றப்படுவதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடுகள் இன்றே படமாக்கப்பட்ட நிலையில் கஸ்தூரி வெளியேற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











