Bigg Boss Tamil 7: அச்சச்சோ இந்த வாரம் டைட்டில் வின்னருக்கே செக்கா?.. இப்படிப் பண்ணிட்டீங்களே பாஸ்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை ஒருவழியாக நெருங்கிவிட்ட நிலையில் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக உள்ளனர். சீக்கிரம் இந்த சீசனை முடித்து விடுங்கள் ஆண்டவரே என கமலுக்கும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது முதல் இந்த சீசன் பிக் பாஸை ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் என பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கலாய்க்கப்படும் கமல்: பரிதாபங்கள் கோபி சுதாகர் எல்லாம் கமல்ஹாசனையே வச்சு ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷன் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியுள்ளது. அதற்கு காரணம், வெறும் மூன்று பேர் மட்டுமே நாமினேட் ஆகியுள்ளது தான்.

Who will evict this week among Vikram, Vichitra and Raveena in Bigg Boss Tamil 7?

யாரைத் தூக்க இப்படி டார்கெட் செய்துள்ளனர் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், சிலரை திட்டமிட்டு காப்பாற்றி உள்ளதாகவும் புகார்கள் கிளம்பி வருகின்றன.

விக்ரம் வெளியேறுவார்: இந்த சீசனின் டைட்டில் வின்னர் நான் தான் என சுற்றி வரும் விக்ரம், அதிக மக்கள் ஓட்டுக்களை கருத்து கணிப்புகளில் பெற்று வரும் விசித்ரா மற்றும் மணியுடன் ஒட்டித் திரிந்துக் கொண்டிருக்கும் ரவீனா உள்ளிட்ட மூவர் மட்டுமே இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர்.

இதில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்றால் சின்ன குழந்தை கூட சொல்லிவிடும் அளவுக்குத்தான் நாமினேஷன் உள்ளது. அதன்படி பார்த்தால், விசித்ரா அதிக ஓட்டுகள் உடன் முதலில் சேவ் ஆவார் என்றும் அடுத்து ரவீனா காப்பாற்றப்பட்டு விக்ரம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் எனத் தெரிகிறது.

ட்விஸ்ட் இருக்குமா?: ஆனால், இந்த வாரமும் எலிமினேஷன் பயங்கர ட்விஸ்ட் இருக்கும் என்றும் விக்ரமுக்கு பதில் இன்னொரு போட்டியாளரை வெளியேற்றவே இந்த ஸ்கெட்ச் போடப்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கணிக்கத் தொடங்கி வருகின்றனர். எப்படி இருந்தாலும் வரும் சனிக்கிழமை பிக் பாஸ் ஷூட்டிங் முடிந்ததும் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.

இந்த சீசனில் ஃபைனல் போட்டியாளர்கள் மாயா, அர்ச்சனா, நிக்சன், தினேஷ், பூர்ணிமா தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விசித்ரா, மணி உள்ளிட்டோர் கடைசி வரை வருவார்களா என்பது சந்தேகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X