பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி!

Recommended Video

Bigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்து விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டு முதல் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் விஜய் டிவி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.

முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து சீசன்கள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இன்னும் சில நாட்கள்

இன்னும் சில நாட்கள்

இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியமும் விறுவிறுப்பும் அதிகரித்துள்ளது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நிறைவடைந்து விடும்.

கமல் இல்லையா?

கமல் இல்லையா?

கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன்தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப்போவதில்லை என தகவல் பரவி வருகிறது.

கமல் பிஸி

கமல் பிஸி

கமல் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதோடு, நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு களம் கண்டுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் கமல். இதனால் அவரால் பிக்பர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என கூறப்பட்டது.

விஜய் டிவி விளக்கம்

விஜய் டிவி விளக்கம்

கமலுக்கு பதிலாக, நடிகர்கள் சிம்பு, சரத்குமார், சூர்யா, அரவிந்த்சாமி ஆகியோர் தொகுத்து வழங்கலாம் என்று பேச்சுக்கள் எழுந்தன. இதற்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த விஜய் டிவியும் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவும் தற்போது விளக்கமளித்துள்ளது.

கமல்தான் தொகுப்பாளர்

கமல்தான் தொகுப்பாளர்

அதாவது, அடுத்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர் என்றும் வேறு யாரிடமும் இதுதொடர்பாக பேசவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு யாரையும் தொகுப்பாளராக கொண்டு வருவது குறித்து எந்த ஐடியாவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தும் கமல்தான்

அடுத்தும் கமல்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் நடத்த விஜய் டிவி 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இதில் மூன்று ஆண்டுகள் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் அடுத்த நான்காவது சீசனையும் நடிகர் கமல்தான் தொகுத்து வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X