ஜீ தமிழ் 'கில்லாடி ஜோடிஸ்' வின்னர்ஸ் யார் தெரியுமா?.. கோப்பை தட்டி தூக்கிய பிரபல ஜோடி!
சென்னை: தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு எப்போதும் விறுவிறுப்பான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது அதிரடியான ரியாலிட்டி ஷோவான 'கில்லாடி ஜோடிஸ்' (Killadi Jodis) நிகழ்ச்சியை ஒரு த்ரில்லான இறுதிப் போட்டியுடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் சவால்கள், உணர்ச்சிகரமான தருணங்கள் என ரசிகர்களைக் கட்டிப்போட்ட இந்த நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது .
கில்லாடி ஜோடிஸ்: கடந்த ஜனவரி 25ந் தேதி அன்று தொடங்கப்பட்ட 'கில்லாடி ஜோடிஸ்', ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை ஒளிபரப்பானது. சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் சமூக வலைதளங்களைச் சேர்ந்த பிரபல ஜோடிகள் இதில் பங்கேற்றனர். அவர்களின் பலம், மன உறுதி மற்றும் குழு ஒற்றுமையைச் சோதிக்கும் வகையில் சவால்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 8 ஜோடிகளுடன் தொடங்கிய இந்தப் போட்டியில், தனிப்பட்ட காரணங்களுக்காக குரு & டாரியா ஜோடி பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து விலகினர்.

போட்டியாளர்கள்: இதைத் தொடர்ந்து யோகேஷ் & நந்தினி, ஐஸ்வர்யா & கிருஷ், அமர் & காயத்ரி, சங்கவி & ராணவ், ஸ்வாதிகா & நரேஷ், தங்கப்பாண்டி & சாந்தினி மற்றும் பிரியா ஜெர்சன் & சார்லி ஜாய் ஆகிய 7 ஜோடிகள் இறுதிப்போட்டியில் மோதினார்கள். இந்த ஜோடிகள் காடு, நீர், நெருப்பு மற்றும் மலை என நான்கு விதமான கடினமான நிலப்பரப்புகளில் அமைக்கப்பட்ட சவால்களை எதிர்கொண்டனர். தொகுப்பாளர் சஞ்சீவ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மேலும் சுவாரசியமாக்கினார்.
வெற்றியாளர்கள்: இலங்கை, வியட்நாம், தாய்லாந்து மற்றும் மாலத்தீவுகள் போன்ற அழகான சர்வதேச நாடுகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான காட்சி விருந்தாக அமைந்தது. காதல், மன உறுதி மற்றும் ஜோடிகளுக்கு இடையேயான புரிதல் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த இறுதிப் போட்டியில், அமர் & காயத்ரி ஜோடி வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றனர். கடும் போட்டிக்கு பிறகு நந்தினி & யோகேஷ் ஜோடி இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். சுவாரஸ்யமான சவால்கள் நிறைந்த டாஸ்க்குகளுடன், 'கில்லாடி ஜோடிஸ்' மீண்டும் ஒருமுறை முழுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகத் தன்னை நிரூபித்துள்ளது. இது போன்ற பல உற்சாகமான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து காண Zee தமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications