உண்மையில் ஏமாற்றியது யார்? கவினா? சாக்ஷியா?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் சாக்ஷியும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சில நாட்களிலே ஹவுஸ்மேட்ஸ்களில் சிலர் காதல் வயப்பட்டனர். ஆண்களில் கவினும் பெண்களில் அபிராமி மற்றும் சாக்ஷி காதலில் விழுந்தனர்.
வீட்டில் காதல் மன்னனாக சுற்றிவந்தவர் கவின். கவின் அபிராமி, சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா என அனைவரிடமும் கடலை போட்டு காதல் வசனம் பேசி வந்தார். இதனை பார்க்கவே எரிச்சலாக இருந்தது.

அபிராமி போரடித்ததால்
தானாக வந்து வலையில் சிக்கிய அபிராமியுடன் கடலை போடும் வரை போட்டுவிட்டு போரடித்துடன் அவரை கழட்டிவிட்டார். இதைத்தொடர்ந்து சாக்ஷியுடன் நெருக்கமாக பழகினார் கவின்.

சாக்ஷியுடன் காதல்
தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணிடம் உள்ள அனைத்து குவாலிஃபிகேஷனும் உன்னிடம் உள்ளது என்று பிட்டை போட்டு சாக்ஷியிடம் காதலை சொன்னார் கவின். சாக்ஷியும் கவினின் காதலை ஏற்றுக்கொண்டார்.

இடையில் வந்த லாஸ்லியா
இருவரும் பிக்பாஸ் வீட்டில் காதல் பறவைகளாக வலம் வந்தனர். சாக்ஷியை காதலித்துக்கொண்டே லாஸ்லியாவிடமும் கடலை போட்டார் கவின். லாஸ்லியாவும் கவினிடம் நெருங்கி பழகினார். கவினை பிடிக்கும், அவரை சைட் அடிப்பேன் என்று கூறினார் லாஸ்லியா.

காதல் தெரியுமா?
இது சாக்ஷிக்கு பிடிக்காமல் போனதால் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கவினும் லாஸ்லியாவும் மிகவும் நெருக்கமாக உள்ளன. கவின் லாஸ்லியாவிடம் இதுவரை சாக்ஷியுடனான காதல் குறித்து வாய் திறந்தாரா என்பது தெரியவில்லை.

மீண்டும் நெருக்கம்
காதல் விவகாரத்தை அரைகுறையாக தெரிந்துகொண்ட லாஸ்லியா கடந்த வாரம் கவினை பிடித்து கத்தினார். அதன்பின்பு பேசாமல் இருந்து லாஸ்லியா தற்போது மீண்டும் நெருக்கமாக உள்ளார். இதனால் சாக்ஷி கடுப்பாகிறார்

மாறிய சாக்ஷியின் முகம்
கவின் காதல் குறித்து கமல் முன்பாக காலர் ஒருவர், யாரை உண்மையாக காதலிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கூட நான் யாரையும் உண்மையாக காதலிக்கவில்லை என்றார். அப்போதே சாக்ஷியின் முகம் மாறிவிட்டது.

சாக்ஷியால் ஏற்கமுடியவில்லை
இதே போல் ஜாலிக்காகதான் பேசினேன் என கவின் கூறியதை கேட்டும் கண்ணீர்விட்டார் சாக்ஷி. பல இடங்களில் கவினின் பேச்சால் காயப்பட்டு வருகிறார் சாக்ஷி. எந்த உறவும் நமக்குள் இல்லை என்று சாக்ஷி கவினிடம் கூறிய பிறகும் அவர் மற்ற பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை சாக்ஷியால் ஏற்கமுடியவில்லை.

குற்ற உணர்ச்சியே இல்லை
காதலித்த நபர் தன் கண் முன்னாலேயே மற்றொரு பெண்ணுடன் இருப்பதை எந்த பெண்ணாலும் ஏற்கமுடியாது. அதன் வெளிப்பாடு தான் சாக்ஷியின் கோபம். ஆனால் எந்த குற்ற உணர்ச்சியுமே இல்லாமல் லாஸ்லியாவுடன் கிடைக்கும் கேப்பில் எல்லாம் கடலை போட்டு வருகிறார்.

டைம் பாஸ்க்காக பழகிய கவின்
சாக்ஷியுடனான காதல் விவகாரத்தில் இருந்து கவின் எளிதில் வெளியே வந்துவிட்டார். பிரேக்கப்பை எதிர்பார்த்ததுபோலவே, அந்த சுவடே தெரியாமல் உள்ளார் கவின். ஆக அவர் டைம் பாஸ்க்காகதான் பழகியுள்ளார். ஆனால் அதிகம் வருத்தப்படுவது சாக்ஷி. அவர் கொஞ்சம் சீரியஸாக காதலித்துவிட்டார் போல் தெரிகிறது. அதனால் தான் அந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கமுடியவில்லை.

சாக்ஷியா ஏமாற்றுவது
ஆனால் கவின், சாக்ஷியுடன் காதலில் இருந்துகொண்டே லாஸ்லியாவிடமும் கடலை போட்டார். லாஸ்லியா சிறையில் இருந்த போது அவரை தொட்டு தடவினார் கவின். இதையெல்லாம் சாக்ஷியிடம் முன்பே செய்த கவின் உதட்டுடன் உதடு முத்தம் கொடுத்ததாகவும் தகவல் பரவி வருகிறது. இவ்வளவும் செய்துவிட்டு சாக்ஷியை ஏமாற்றுகிறாள் என்கிறார் கவின்? இது யாருக்கு வெளிச்சம்.


Click it and Unblock the Notifications











