Just In
- 6 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 7 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 9 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 9 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Sun tv serials: அப்படி பொங்கி வழிஞ்சுச்சே ரொமான்ஸ் .. எல்லாம் கருகி காணாமல் போயிருச்சே!
சென்னை: சீரியல்கள் என்றாலே சன் டிவிதான்... வரிசையா புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பு செய்துகிட்டே இருப்பார்கள். இந்த சீரியல்களில் சிலவற்றில் ரொமான்ஸ் தூக்கலாக இருக்கும். இதற்கான ஒரு ரசிகர் கூட்டம் உண்டு என்றாலும், ஹாலில் அனைவருடனும் உட்கார்ந்து பார்க்க முடியாதபடி கூட சில நேரங்களில் இருக்கும்.
சன் டிவியின் ரோஜா, சந்திர லேகா, நாயகி, ட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல்களை உதாரணமாக சொல்லலாம். மற்ற சீரியல்களில் இந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் இருந்ததில்லை. புருஷன் பொண்டாட்டி அன்யோன்யத்தை காண்பிப்பார்கள் அவ்வளவுதான்.
இப்படிப் பொங்கி வழிந்த சீரியல்களின் ரொமான்ஸ் காட்சிகள் அண்மை சில வாரங்களாக அல்லது மாதங்களாக என்று கூட சொல்லலாம். சுத்தமாக இல்லை. கதை போக்கு கூட சீரியஸ்ஸாகி உள்ளது. இதை குறை என்று ஒரு சாரார் சொன்னாலும், பலருக்கும் நிறை என்றுதான் தோன்றுகிறது.

அர்ஜுன் ரோஜா
ரோஜா சீரியலில் ரோஜா அர்ஜுன் இருவரும் ஒரு வருட அக்ரிமெண்ட் போட்டு கல்யாணம் செய்து வந்திருப்பார்கள். இந்த உண்மையை தெரிந்து கொண்ட அணு, எல்லாரிடமும் இதை சொல்ல முயற்சிக்கையில்தான், ரோஜாவும், அர்ஜுனும் ரொமான்ஸ் செய்து, தாங்கள் உண்மையான தம்பதியர்தான் என்று நிரூபிக்க அதிகமாக ரொமான்ஸ் செய்ய வேண்டி இருந்தது. இப்போது இருவரும் விரும்பி கல்யாணமும் செய்துகொண்டு விட்டதால், ரொமான்ஸ் காட்சிகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.

கண்மணி செழியன்
ஆனந்தி திரு ரெண்டு பேர் ரொமான்ஸ் ஓரளவுக்கு இருந்தாலும்,செழியன், கண்மணி ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலாகத்தான் நாயகி சீரியலில் இருந்தது. இப்போது ஆனந்தி, திரு கதை சீரியஸ் டிராக்கில் சென்று கொண்டு இருப்பதால், ரொமான்ஸுக்கு வேலை இல்லை. இருந்தாலும், கண்மணி,.செழியன் இருவருக்குள்ளும் முதலிரவே இன்னும் நடக்காத நேரத்தில் ரொமான்ஸ் அவ்வப்போது நடந்துகொண்டு இருக்கிறது.

பாக்கியலட்சுமி ரவி
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலின் பட்டர் பிஸ்கட் ரவி, பஞ்சுமிட்டாய் பாக்கியலட்சுமி ரொமான்ஸ் பற்றி கேட்கவே வேண்டாம். மழையில் நனைஞ்சு டூயட் பாடறது என்ன. கண்களை மிதக்க விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கறது என்னன்னு ஹை ரொமான்ஸுங்க. ஆனால், இப்போது இருவரும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டு, படும் அவஸ்தைகளைக் கதைக்குள் வந்துவிட்டதால், ரொமான்ஸா அப்டீன்னா என்னான்னு கேட்கும் அளவுக்கு இருக்கு.

நிலா ரொமான்ஸ்
சந்திரலேகா சீரியலில் ரொமான்ஸ் செய்வதற்கென்றே சந்திராவை டபுள் ஆக்ஷன் போல காண்பித்து, அவளுக்கு நிலான்னு பேர் வச்சு, புருஷன் கூட சேர விடாத மாமியார்னு ஒரு கதை பின்னி இருந்தாங்க. அவங்களுக்குள்ள ரொமான்ஸ் தாண்டவமாடுச்சு. ஆனால்,என்னிக்கு இவர்களுக்குள் சாந்தி முகூர்த்தம் நடந்து முடிந்ததோ, அன்றிலிருந்து இந்த குடும்பத்தையே அந்த சீரியலில் காணோம்.
ரொமான்ஸ் இருந்தாலும், இல்லேன்னாலும் சீரியல் கதைகளை நன்றாக கொடுங்கள்.மக்கள் ரசித்து பார்ப்பார்கள் என்பதற்கு உதாரணமாக இந்த ரொமான்ஸ் காட்சிகள் இல்லாத சீரியல்கள் உள்ளன. உண்மையை சொல்லித்தானே ஆகணும்!