நான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன்?: கமலிடம் உண்மையை சொன்ன மதுமிதா

By Siva

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தனக்கு தானே தீங்கு விளைவித்துக் கொண்டதற்கான காரணத்தை கமலிடம் தெரிவித்துள்ளார் மதுமிதா.

பிக் பாஸ் 3 வீட்டில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து நேற்று அவரை வெளியேற்றினார்கள்.

ப்ரொமோ வீடியோவில் மதுமிதா கையில் கட்டுடன் இருப்பதை பார்த்த பார்வையாளர்கள் இரவு நிகழ்ச்சியை பார்த்தால் விபரம் தெரியும் என்று நினைத்தார்கள்.

விதிமீறல்

விதிமீறல்

பிக் பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது ஆகியவற்றை எல்லாம் நேற்று இரவு நிகழ்ச்சியில் காட்டுவார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எடுத்த எடுப்பிலேயே டாஸ்கிற்கு பிறகு நடந்த விவாதத்தில் தனது கருத்தை நிரூபிக்க மதுமிதா தனக்கு தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்தெறிவதாகவும். இந்த அடிப்படையில் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

மதுமிதா

மதுமிதா

பிக் பாஸ் அறிவிப்பு வெளியிட்ட உடனேயே கமல் ஹாஸனும், மதுமிதாவும் மேடைக்கு வந்தார்கள். மதுமிதாவை பார்த்த கமல் உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்க அவரோ மனம் தான் வேதனையாக உள்ளது என்றார். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள மூவரில் உங்களின் பெயர் இருந்தது. கேப்டன்சிக்கு தேர்வாகியிருந்தீர்கள். தட்டில் வைத்துக் கொடுத்த வெற்றியை தட்டிவிட்டுவிட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக உள்ளது, வருத்தமாக உள்ளது என்று கமல் மதுவிடம் தெரிவித்தார்.

தைரியசாலி

தைரியசாலி

மக்கள் மட்டும் என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் எவ்வளவு தைரியமானவள் என்பது தெரியும். இந்த வீட்டில் என் தைரியம் எந்த அளவுக்கு சோதிக்கப்பட்டிருந்தால் நான் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பேன் என்றார் மதுமிதா. இவள் முட்டாள், கேப்டன்சிக்கு தகுதியில்லாதவள் என்று வீட்டில் உள்ளவர்கள் கூறியபோது யார் முட்டாள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அந்த ஒரு வேகத்தால் நடந்த விஷயம் தான் இது என்று தான் தற்கொலைக்கு முயன்றதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் மதுமிதா.

வருத்தம்

வருத்தம்

என்ன காரணமாக இருந்தாலும் தன்னை துன்புறுத்திக் கொள்ளக் கூடாது என்பது தான் என் கருத்து என்று மதுமிதாவிடம் தெரிவித்தார் கமல். மதுமிதா இப்படி செய்திருக்கக் கூடாது. நான் உங்களை விமர்சிக்கவில்லை, என்னுடைய அக்கறை. நான் விமர்சிப்பதாக இருந்தால் என் குரல் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றால் கமல். பிக் பாஸ் அறிவுறுத்தலின்படி கமலும் சரி, மதுமிதாவும் சரி அந்த முக்கிய பிரச்சனையின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X