என்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் வாக்குரிமை பற்றி பேசிய கமல் ஹாஸன் மீது பார்வையாளர்கள் கோபத்தில் உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் நித்யா வெளியேற்றப்பட்டார். யாஷிகாவை வெளியேற்றவே பார்வையாளர்கள் அதிக அளவில் வாக்களித்தார்கள்.
நியாயப்படி யாஷிகாவை வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால் ஏதோ குளறுபடி செய்து நித்யாவை அனுப்பிவிட்டார்கள்.

ட்விட்டர்
நித்யா வெளியேற்றப்பட்டதை பார்த்த பார்வையாளர்கள் ட்விட்டரில் கொந்தளித்துவிட்டார்கள். விஜய் டிவி மற்றும் கமல் ஹாஸன் மீது கோபப்பட்டு ட்வீட்டினார்கள். அவர்கள் கொந்தளித்ததால் ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

கமல்
பார்வையாளர்களின் வாக்குகள் மிகவும் முக்கியம் என்று பிக் பாஸ் 2 மேடையில் பேசினார் கமல். மேலும் வாக்களிப்பது என்பது எவ்வளவு முக்கியமான பொறுப்பு என்று விளக்கினார் கமல்.

நல்லா இல்லை
அறிவுரை எல்லாம் நன்றாக வழங்கினீர்கள் கமல் சார். ஆனால் நாங்கள் அளித்த வாக்குகளை மதிக்காமல் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு யாஷிகாவை காப்பாற்றிவிட்டீர்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
ஓட்டு
நீங்களே தீர்மானிப்பது என்றால் எங்களை எதற்காக வாக்களிக்கச் சொல்கிறீர்கள் என்று மக்கள் சமூக வலைதளத்தில் கொந்தளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











