twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸில் எட்டிப்பார்த்த அரசியல்வாதி கமல்: அரசுகள் ஊழல் செய்வது குறித்து நறுக்

    By Siva
    |

    Recommended Video

    பிக் பாஸ் மேடையில் அரசியல் பேசிய கமல்- வீடியோ

    சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசாங்கங்கள் ஊழலாவது ஏன் என்று விளக்கம் அளித்தார் கமல் ஹாஸன்.

    பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் தான் சூடுபிடித்தது. அதற்கு காரணம் கமல் ஹாஸன் வருகை. நேற்றைய நிகழ்ச்சியில் அவர் அரசியல் பேசி கைதட்டல்களை அள்ளினார்.

    நேற்றைய நிகழ்ச்சி கமல் செய்தவை,

    பாடல்

    பாடல்

    வைஷ்ணவி கேட்டுக் கொள்ள மாருகோ மாருகோ பாடலை பாடினார் கமல். மனிதர் அந்த பாடலை பாடியபோது அவர் கண்களே கதை பேசியது. கமல் பாடியதை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் குஷியாகி எழுந்து நின்று கை தட்டினார்கள். ஆனால் ஆனந்த் வைத்தியநாதன் மட்டும் பாராட்டவில்லை. அவருக்கு கமல் மீது என்ன கோபமோ?

    நாய்

    நாய்

    பீம் பாய் பீம் பாய் வசனத்தை பேசிக் காண்பித்தார் கமல் ஹாஸன். நாய் என்ற வார்த்தையை சொல்லலாம் அல்லவா என்று கமல் பார்வையாளர்களை பார்த்து கேட்டார்.

    கடவுள் பாதி

    கடவுள் பாதி

    கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்று பாடிய கமல் ஹாஸன் அந்த பாடல் வளர்ந்த விதத்தை சொல்லி அந்த குடும்பம் எங்களுடைய பிக் பாஸ் என்று கூறி மகிந்தார்.

    கடமை

    கடமை

    பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றார் கமல். கடமையை செய்வதை ஏதோ தியாகம் மாதிரி நினைப்பதால் தான் பல அரசுகள் கரப்ட் ஆகிறது என்று ஒரு பன்ச் டயலாக் பேசினார் கமல். பல அரசாங்கங்கள் ஊழலுக்கு ஆளாவதற்கு காரணம் செய்யும் கடமையையே ஏதோ தியாகம் என்று நினைப்பது தான் என்றார் கமல். விஸ்வரூபம் 2 படத்தின் ஒரு பாடலை பிக் பாஸ் மேடையில் வெளியிட உள்ளேன் என்று தெரிவித்தார் கமல்.

    English summary
    Kamal Haasan has explained as to why do governments become corrupt. He said this in the bigg boss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X