எதிர்ப்புகளுக்கு இடையே கமல் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் தெரியுமா?

By Siva

சென்னை: தான் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது, தொகுத்து வழங்க வேண்டாம் என்று கடந்த சீசனிலேயே கமலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

கமல்

கமல்

நான் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டதற்கு காரணம் இதில் எனக்கு ஒரு அற்புதமாக வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் நான் என்று சொல்லும் அந்த அற்புதமான வாய்ப்பு கிடைக்கிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

கடந்த முறை இந்த நிகழ்ச்சயில் கலந்து கொண்டவர்கள் அவர்களாக இருந்தார்கள். இந்த முறை அப்படி இல்லை. உதாரணமாக எஜமானர், வேலைக்காரர் டாஸ்க்கை விளையாட்டு என்பதை மறந்துவிட்டார்கள்.

மக்கள்

மக்கள்

எனக்கும் சரி, போட்டியாளர்களுக்கும் சரி உண்மையான எஜமானர்கள் மக்கள் தான். அதை மறந்தவர்கள் எந்த கட்டிடத்திற்குள் இருந்தாலும் கஷ்டப்படுவார்கள். இல்லை என்றால் இருக்கும் இடத்தை விட்டே அகற்றப்படுவார்கள். இது புரியாமல் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் விளையாடியது போன்று எனக்கு தோன்றுகிறது.

ஆமோதிப்பு

ஆமோதிப்பு

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் பலர் போலியாக இருப்பதாக பார்வையாளர்களில் ஒருவர் தெரிவித்ததை ஆமோதித்தார் கமல் ஹாஸன். கடந்த முறை நடந்தவற்றை பார்த்துவிட்டு சேஃபாக இருக்கிறேன் என்ற பெயரில் போலியாக உள்ளார்கள் என்றார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X