Kalyana veedu serial: சீரியல் தொய்வடையாம இருக்க தலையை காட்டறாரா கோபி?

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல், களைக்கட்டத் துவங்கியதே திருமுருகன் சீரியலில் நடிக்கிறார் என்பதால்தான்.

மெட்டி ஒலியில் பேர் வாங்கித் தந்த கோபி கிருஷ்னன் என்கிற பெயரில் மறுபடியும் அவர் நடிக்க வந்ததால்தான்.

நாதஸ்வரம் சீரியல் முடிந்த பிறகு தனக்கு பிரேக் வேணும்னு நினைச்சு, அவர் இல்லாமல் எடுத்த குலதெயவம் சீரியல் எடுபடவில்லை.ஆரம்பிச்ச ஒன்றரை வருஷத்தில் சீரியல் முடிந்து போனது.

குல தெய்வம் சீரியல்

குல தெய்வம் சீரியல்

கல்யாண வீடு சீரியல் ஆரம்பத்தில் டெல்லியில் ஷூட் செய்யப்பட்டது. அப்போது குல தெய்வம் சீரியல் நடிகர்களே கூட, நம்ம நடிக்கும் சீரியல்தான் சட்டு புட்டுன்னு முடியப் போகுதுன்னு தெரியாமலே இருந்தாங்க. கல்யாண வீடு சீரியல் பத்தி அறிவிப்பு வந்த உடனே, நடிகர் நடிகைகள் அதிர்ச்சி கூட ஆகிட்டாங்களாம். சிலர் அழவும் செய்தார்களாம் பின்னே வாய்ப்பு கிடைப்பது என்பதே அரிது. அதிலும் மெகா சீரியலில கிடைச்சுட்டால் அப்படியே செட்டிலாகிடலாம்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தவங்களுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்.

கேரக்டர் ரோல்

கேரக்டர் ரோல்

குல தெய்வம் சீரியலில் என்னென்ன மைனஸ் ஆனதோ,அதை எல்லாம் பிளஸாக்க நினைச்சுத்தான் முதல் யோசனையாக தான் நடிச்சே ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தாராம். இப்படி அவர் ஆரம்பிச்சு களைக்கட்டிய சீரியலில் கடந்த மூன்று மாதங்களாக திருமுருகன் தலைக் காட்டவில்லை. சீரியல்படி கோபி காணாமல் போயிட்டார்.

இரண்டு முறை

இரண்டு முறை

எப்போது காணாமல் போன கோபி கிடைப்பார்னு மக்கள் நினைச்சுகிட்டு இருக்கும்போது, என்னவோ இன்னிக்கே சீரியலில் வந்துடற மாதிரி அவரை வச்சு ஏதோ ப்ரோமோ போடுவாங்க. மக்களும் நம்பிப் பார்த்தால், அது ஃபிளாஷ்பேக்கா இருக்கும். இல்லை அது வெறும் ப்ரோமோவா இருக்கும். இன்றும் ஒரு ப்ரோமோ..அது ஒரு பெரிய கதைங்கன்னு சொல்லிக்கிட்டு தலையை காமிக்கறார் ப்ரோமோவை சீரியலில். எதிர்பார்த்து ஏமாந்துடாதீங்க.

என்றாலும் பரபர

என்றாலும் பரபர

வெறும் பெண்களே நடிச்சு கதை நகர்ந்துக்கிட்டு இருந்தாலும் கதை சுறு சுறுப்பா நகருது. இந்த வகையில் திருமுருகனை பாராட்டி ஆக வேண்டும். ஒரு வகையில் எந்த சூழலிலும் பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும்படி கதையை நகர்த்தி கொண்டு போவது சிறப்பு. பெண்களை களத்தில் இறக்கி விட்டு, அவர்களையும் கொஞ்சம் ஆட வைத்து ரசிக்கலாம் என்று திருமுருகன் ஒதுங்கி இருக்கார் போலும். இது கூட சிறப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X