ஜெனிபர் பாக்யலட்சுமி சீரியலை விட்டு விலக இதுதான் காரணமாம்.. பரபரப்பு தகவல்!

சென்னை : பாக்யலட்சுமி சீரியலை விட்டு விலகியுள்ள நடிகை ஜெனிபர், தான் ஏன் விலகினேன் என்பதற்கான இன்னொரு காரணத்தை தற்போது விளக்கியுள்ளார்.

Recommended Video

Bakkiyalakshmi Radhika தரப்பு விளக்கம் | Jennifer, Amman, Sharadha

முதலில ஒரு வீடியோ போட்டு அவரும் அவரது கணவரும் ஒரு விளக்கம் கொடுத்திருந்தனர். தற்போது இன்னொரு காரணத்தையும் ஜெனிபர் விளக்கியுள்ளார்.

ஆனால் அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு ரசிகர்கள்தான் ஸ்வீட் ஷாக்காகி விட்டனர்.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான் .ஆனால் அதில் ராதிகாவாக நடித்துக்கொண்டிருந்த ஜெனிஃபர் அந்த சீரியலை விட்டு விலகியதும் சீரியலை விடவும் படுவேகமாக பரவத் தொடங்கிவிட்டது. இந்த சீரியலின் ரசிகர்கள் அதிகமானோர் ராதிகாவாக இவ்வளவு நாளாக ஜெனிபரை பார்த்து வந்ததால் ஐயோ திடீர்னு என்ன ஆச்சு ஏன் இவர் சீரியலை விட்டு போகிறார் என்றுதான் கேட்டு வந்தனர் .அதற்கு விளக்கம் கொடுத்து ஜெனிபர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

கணவருடன் போட்ட வீடியோவில் சீரியலை விட்டு விலக இரண்டு காரணம் இருக்கிறது என்றும் அதில் ஒரு காரணம் சீரியல் இனி வேற மாதிரி கதை மாறப்போகிறது அது என்னுடைய கேரக்டருக்கு செட் ஆகாது என்று கூறியிருந்தார் .மற்றொரு பெர்சனல் காரணத்தை விரைவில் கூறுவேன் என்று சஸ்பென்ஸ்ஸாக முடித்துவிட்டார் .அது என்னவாக இருக்கும் என்று ஒரு வாரமாக ரசிகர்கள் குழம்பி வந்தனர் . தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் .அதைப் பார்த்ததும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

முதல் ஆண் குழந்தை

முதல் ஆண் குழந்தை

பாக்கியலட்சுமி ஜெனிபருக்கு நந்திதா ஜெனிஃபர் என்றுதான் பெயராம். இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான நாகவல்லி சீரியலின் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .அந்த சீரியல் 2008 முதல் 2010 வரைக்கும் ஒளிபரப்பப்பட்டது . அதனைத்தொடர்ந்து புவனேஸ்வரி சீரியலும் வந்திருக்கிறது .இந்த சீரியலில் நடிப்பதற்கு சிறிது மாதத்திற்கு முன்புதான் இவருக்கு முதல் ஆண் குழந்தை பிறந்து இருக்கிறதாம்.

அதுதான் நிஜம்

அதுதான் நிஜம்

இதைக் கேட்டு ரசிகர்கள் ஸ்வீட் ஷாக்காகி விட்டனர். என்ன இவருக்கு குழந்தை இருக்கிறதா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அது தான் உண்மை . இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது .குழந்தை பிறந்த ஒரு சில மாதத்தில் தான் இவர் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியிருக்கிறார் .இந்த சீரியல் தனக்கு நல்ல ஒரு வரவேற்பபை கொடுத்திருக்கிறது என்று சீரியலில் அதிகமான கவனத்தை செலுத்தி வந்தார்.

லட்சுமி ஸ்டோர்ஸ்

லட்சுமி ஸ்டோர்ஸ்

அதனைத் தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி சீசன் 2வில் கலந்து கொண்டிருக்கிறார் .மீண்டும் சன் டிவியில் லட்சுமி ஸ்டோர் சீரியலிலும் நடித்திருக்கிறார். தற்போது கலர்ஸ் சேனலில் அம்மன் சீரியலில் சாரதாவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது இவர் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து மட்டும்தான் விலகி இருக்கிறாராம். அம்மன் சீரியல் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இரண்டாவது குழந்தை

இரண்டாவது குழந்தை

அதனால் இவரிடம் மீண்டும் ரசிகர்கள் எதற்காக இந்த சீரியலை மட்டும் விட்டு விலகி விட்டீர்கள் என்று கேட்டதற்கு தான் தற்போது ஒரு அழகான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார் .இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் ரொம்பவே சந்தோஷம் அதற்காகத்தான் நாங்கள் ஆசைப்படுகிறோம் .ரசிகர்களாகிய நீங்கள் எனக்குத் தந்த ஆதரவினை எனது குழந்தைக்கும் ஆசிர்வாதங்கள் ஆக தரவேண்டும்.

குழந்தைக்கு ஆசீர்வாதங்கள்

குழந்தைக்கு ஆசீர்வாதங்கள்

எனக்கு ஒரு அழகான பெண் குழந்தை கிடைத்தாலே போதும் என்று தனது சந்தோசத்தை ரசிகர்களிடம் ஷேர் பண்ணி இருக்கிறார். தற்போது 6 மாதம் ஆகிவிட்டதால் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இவருடைய வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும், கூடவே ,ஆசீர்வாதங்களையும் பொழிந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவர் போட்ட போஸ்டை பார்த்ததும் முதலில் ஷாக் ஆனாலும் இப்போது வாழ்த்த ஆரம்பித்து விட்டனர்.

குழந்தைக்கு குவியும் வாழ்த்துக்கள்.

குழந்தைக்கு குவியும் வாழ்த்துக்கள்.

உங்கள் மனது போலவே உங்களுக்கு அழகான தேவதை போன்று பெண் குழந்தை பிறக்கும் என்று தான் பலரும் ஆசீர்வாதங்களை வழங்கி வருகின்றார்கள். ரசிகர்களின் கமெண்டுகளை பார்க்கும் போதே தெரிகிறது இவர் எந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து இருக்கிறார் என்று .இவருடைய ஆசை மட்டுமல்லாமல் தற்போது ரசிகர்களிடையே ஆசையும் சீக்கிரத்தில் நிறைவேற நாமும் ஆசீர்வாதங்களை வழங்குவோம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X