Agni natchathiram serial: வேணாம் வேணாம்னு தள்ளிப் போறவனை வேணும் வேணும்னு சொல்றீங்களே!

சென்னை: சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியல், அதே சன் டிவியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் போலவே இருக்கிறது. என்ன ஒரு வேற்றுமை அது பழைய சீரியலா இன்னும் ஒளிபரப்பாகுது. இது புது சீரியலா இப்போ ஒளிபரப்பாகிட்டு வருது.

இரண்டுமே மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.சந்திரலேகாவில் உடன் பிறந்த அக்காவின் பெண் தம்பியிடம் வளர்கிறாள் .தம்பியின் பெண்,அக்காவிடம் வளர்கிறாள்.

அக்னி நட்சத்திரம் சீரியலில் நண்பனுக்கு பிறந்த பெண் குழந்தை இறந்துவிட, தனது மனைவிக்குப் பிறந்த இரட்டை பெண் குழந்தையில் ஒன்றை தனது நண்பனும், முதலாளியாகவும் இருக்கும் நண்பனுக்கு டிரைவர் தனது மனைவி ஜெயந்திக்கு தெரியாமலே கொடுத்துடறார்.

அகிலா முதலாளியின் பெண்

அகிலா முதலாளியின் பெண்

மீரா அம்மா அப்பாவிடமே வளர்கிறாள் என்றாலும், நண்பனிடம் டிரைவராக வேலைப் பார்க்கும் முதலாளியிடம்தான் அகிலா வளர்கிறாள். அகிலாவுக்கு பணக்காரி என்கிற திமிர்.தான் நினைத்தது எல்லாம் கிடைத்து விட வேண்டும் என்கிற பேராசை.ஆனால், மீரா ஏழை டிரைவர் அப்பாவுக்கு ஏற்ற பெண்ணாக நல்லபடியாக வளர்கிறாள். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தாலும், மீராவுக்கு எதிரி போலவே நடந்துக்கறா அகிலா

ஸ்ரீதர் அகிலா

ஸ்ரீதர் அகிலா

முதன் முதலில் மீராவை கோயிலில் பார்த்த ஸ்ரீதர், அவளை காதலிக்க ஆரம்பிச்சுடறான்.பின் நாளில் மீராவும் ஸ்ரீதரை காதலிக்க ஆரம்பிச்சுடறா. இதுக்கு நடுவுல தன் அப்பாவோட நன்பரின் மகன்தான் பணக்கார ஸ்ரீதர்னு அகிலாவுக்கு ஸ்ரீதர் மேல் காதல் வந்துருது. மீரா அப்பா அம்மாவுக்கு மீரா ஸ்ரீதரை காதலிக்கறது தெரியாது. அதனால, அகிலா ஸ்ரீதர் காதலுக்கு சப்போர்ட் செய்யறாங்க. ஸ்ரீதரை உடனே வர சொல்லுங்கன்னு அகிலா தூக்க மாத்திரையை போட்டுக்கிட்டு பயமுறுத்த, ஸ்ரீதருக்கு போன் செய்தால் எடுக்க மாட்டேன்னு அடம் புடிச்சு வண்டியில போயிகிட்டு இருக்கான்.

ஸ்ரீதர் காதல்

ஸ்ரீதர் காதல்

ஸ்ரீதரின் அம்மாவுக்கு மீராவைத்தான் மகன் காதலிக்கறான்னு தெரியும். அவங்களுக்கும் மகனின் பிறந்த நாளுக்கு வந்த மீராவைத்தான பிடிச்சு போகுது. அகிலாவைப் பிடிக்கலை. அகிலாவுக்கும், ஸ்ரீதருக்கு கல்யாணம் பேசிடலாம்னு ஸ்ரீதரின் அப்பா பேச, அகிலாவின் அப்பா வேணாம் என் பொண்ணு நிறைய படிக்கணும்னு சொல்றார்.எப்படியாவது மீராவைத்தான் மகனுக்கு கல்யாணம்பண்ணி வைக்கணும்னு ஸ்ரீதரின் அம்மா நினைக்கறாங்க.

வேணும் வேணும்

வேணும் வேணும்

வேணாம் வேணாம்னு போற பையனைத் தேடி வேணும் வேணும்னு அடம் பிடிக்கறது. அவனுக்காக தற்கொலை செய்யும் முடிவுக்கு போறது... இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு. இப்படிப்பட்ட தன்மையை சீரியல்கள் மூலம் வளர்த்து விடுவதைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும். யாருக்கும் யாருக்கும் விருப்பமோ அவர்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும்.இதை இளம் பெண்கள் புரிஞ்சுக்கணும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X