Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த மனுஷனை வெளியேற்ற தான் கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாரா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று பொன்னம்பலம் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் 2 வீட்டில் வாரா வாரம் நாமினேட் ஆகி கடைசி நேரத்தில் தப்பித்துக் கொள்பவர் சித்தப்பு பொன்னம்பலம். சும்மா சொல்லக் கூடாது டி சர்ட் டாஸ்கின்போது மகத் போன்று சூப்பராக நடித்தார்.
ம்ஹூம், மகத்தாகவே மாறிவிட்டார். இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது பொன்னம்பலம் தான் என்று கூறப்படுகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
நான் ஏன் வந்தேன் என்று காரணம் சொல்கிறேன் என கமல் கூற, பொன்னம்பலமோ, பாலாஜி அவ்வப்போது சொல்வார் சார், நீங்க போவது மாதிரி தெரியல, கமல் சார் வந்து கூப்பிட்டுப் போவார் என்றார் என கூறினார்.
#பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?! 🤔🤔#BiggBossTamil - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/1qfq0FumZJ
— Vijay Television (@vijaytelevision) August 12, 2018
மேலும் இந்த வாரம் வெளியேறுபவரின் பெயர் அடங்கிய கார்டை பொன்னம்பலம் பார்த்துவிட்டு டன் டடன் டடன் என்று மியூசிக் போடுகிறார். ப்ரொமோவில் என்னவோ பொன்னம்பலம் வெளியேறுவது போன்று தான் சூசகமாக காட்டியுள்ளனர். ஆனால் வழக்கமாக ப்ரொமோவில் காட்டுவதற்கு நேர் எதிராகத் தான் நிகழ்ச்சி இருக்கும் என்பதால் இதை நம்ப முடியாது.
இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் தான் உண்மையில் வெளியேறுபவர் யார் என்பது தெரியும்.