மதுமிதா மேல அந்த நடிகைக்கு ஏன் இவ்வளவு கோவம்? சின்னப்பிள்ளைதனமால்ல இருக்கு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதுமிதா மீது சாண்டியின் முன்னாள் மனைவி கடும் கோபத்தில் உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதுமிதா புறம் பேசுவதோ அல்லது மற்றவர்கள் குறித்து பின்னால் பேசுவதோ இல்லை. தவறு என மனதில் பட்டதை கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென கேட்டு விடுகிறார்.
மொத்த ஹவுஸ்மேட்ஸ்ம் சேர்ந்து சண்டை போட்டப்போது கூட நிதானமாக அந்த சூழ்நிலையை கையாண்டார் மதுமிதா. இதனால் மதுமிதாவுக்கு மக்கள் ஆதரவு கொடுத்தனர்.

பழைய பகை
ஆனால் ஆரம்பத்தில் மதுமிதா கூறிய தமிழ்ப்பெண் என்ற வார்த்தையால் சாண்டி, கவின் ஆகியோருக்கு மதுமிதாவுக்கு எதிராக திரும்பினர். பின்னர் மற்றவர்கள் மதுமிதாவை புரிந்து கொண்டு நட்பு பாராட்டிய போது கூட அவர்கள் இருவரும் அந்த பகையை மனதில் வைத்தே இருந்தனர்.

ஹெவி மூவ்மென்ட்
அண்மையில் பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட கிராமத்து டாஸ்க்கின் போது சாண்டியிடம் கடுமையாக நடந்துகொண்டார் மதுமிதா. காரணம் மதுமிதாவுக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும் கூட சாண்டி ஹெவி மூவ்மென்ட் ஒன்று போட்டுவிட்டு பாத்ரூமுக்கு செல்லுங்கள் என்றார்.

ஆம்பளையா?
இதனால் கோபமான மதுமிதா, அடுத்தவர் அழுவதை பார்த்து சிரிப்பவனெல்லாம் ஆம்பளையா என கேட்டு காரித்துப்பினார். மேலும் கமலிடமும் சாண்டி செய்யும் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டினார்.

யார் திட்டினாலும் சந்தோஷம்
இதன் காரணமாகதான் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜலுக்கு மதுமிதா மீது கோபம் ஏற்பட்டது. இதனால் மதுமிதா என்ன செய்தாலும் குறை சொல்லும் காஜல் அவரை யார் திட்டினாலும் சந்தோஷப்பட்டுக்கொள்வார்.

பாசம் இல்லாமலா போய்விடும்?
அந்த அடிப்படையில் தான் இன்று லாஸ்லியா மதுமிதாவை திட்டிய புரமோவை கூட காஜல் தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். என்னதான் முன்னாள் கணவராக இருந்தாலும் பாசம் இல்லாமலா போய்விடும்!


Click it and Unblock the Notifications











