நிக்சனை நிக்க வச்சு கமல் கேட்க மாட்டாரு?.. பாடி ஷேமிங்கை அங்க எப்படி வெளுக்குறாங்க பாருங்க!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து தான் வெளியே அனுப்பியது தவறில்லை என சமூக வலைதளங்களில் வெடித்த எதிர்ப்புக்கு எந்தளவுக்கு முட்டுக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு முட்டுக் கொடுக்கவே கமல் கடந்த வார ஷோவை நடத்தியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பிரதீப் ஆண்டனி பெண்களுக்கு எதிரான குற்றத்தை செய்து விட்டார் என கொந்தளித்த கமல் அதே ஆர்வத்தை ஏன் வினுஷாவை பாடி ஷேமிங் பண்ண நிக்சன் மீது காட்டவில்லை என்கிற கேள்வியை பிக் பாஸ் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

மேலும், அது போன்ற ஒரு விவகாரத்தை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாகார்ஜுனா எப்படி டீல் செய்தார் பாருங்க என்றும் காட்சிகளை வெளியிட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.
வினுஷாவை பாடிஷேமிங் செய்த நிக்சன்: பெண்களுக்கு எதெல்லாம் எங்க எங்க எப்படி எப்படி இருக்கணுமோ, அதெல்லாம் அப்படி அப்படி இருக்கணும். ஆனால், வினுஷா தேவிக்கு அதெல்லாம் அப்படி இல்லை என ஐஷூவிடம் கேவலமாக வினுஷா பற்றி பாடிஷேமிங் செய்து நிக்சன் பேசிய நிலையில், அதனை வெளியே வந்து பார்த்த வினுஷா நிக்சனை சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
பிரதீப் ஆண்டனி பஞ்சாயத்து: பிரதீப் ஆண்டனிக்கு எதிராக பெண் போட்டியாளர்கள் செங்கொடி உயர்த்தியதும் அது குறித்து தீர விசாரிக்காமல் எந்தவொரு குறும்படத்தையும் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக போட்டுக் காட்டாமல் மெஜாரிட்டியாக ஒருவரை கேங் சேர்த்துக் கொண்டு குற்றம் சுமத்தியதன் காரணமாக அவரை வெளியே அனுப்பி விட்டார் கமல் என்றும் அதற்கு விளக்கம் கொடுத்து தன்னை சேஃப் கார்டு செய்யவே கடந்த வார எபிசோடை பயன்படுத்திக் கொண்டார் என கலாய்த்து வருகின்றனர்.

நாகார்ஜுனா விளாசல்: இதே பிரச்சனை தெலுங்கில் எழுந்த நிலையில், ஒரு பெண் போட்டியாளரின் அங்க அசைவுகளை பாவனை மூலம் செய்த ஒரு ஆண் போட்டியாளரை நிற்க வைத்து கேள்வி எழுப்பி அதனை நாகார்ஜுனா வன்மையாக கண்டித்த காட்சிகளை பகிர்ந்து பிக் பாஸ் ரசிகர்கள் இதை பத்தியெல்லாம் கடந்த வாரம் கமல் கண்டுக்கவே இல்லை என வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











