நோ சொன்னா நோ தான்.. கமல் கிட்ட பொய் சொல்லிட்டு.. இப்போ சீக்ரெட் ரூமுக்கு போயிட்டீங்களே கஸ்தூரி!
பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு நடிகை கஸ்தூரி எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரி, நிஜமாகவே வேறொரு சீக்ரெட் ரூமுக்குப் போய் விட்டார் போல.
கடந்த இரண்டு சீசன்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, ஒரு வழியாக இந்த சீசனில் வைல்ட் கார்ட் மூலம் அதிரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் கஸ்தூரி. முதல்நாளைத் தவிர அவரால் வேறு எதுவும் கண்டெண்ட் கொடுக்க இயலவில்லை. இதனால் வீட்டில் இருப்பவர்கள் அவரை காமெடி பீசாகப் பார்க்க ஆரம்பித்தனர்.
வெளியில் டிவிட்டரில் போட்ட அளவுக்குக் கூட, பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ச்சை ஏற்படும் வகையில் சண்டை எதையும் கஸ்தூரியால் போட இயலவில்லை. இதனால் நாமினேட் ஆன முதல் வாரமே குறைந்த வாக்குகளைப் பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸில் எலி
‘பிக் பாஸ் வீட்டில் மீதம் 50 நாட்கள் இருப்பார், புலி இப்போது பதுங்குகிறது சீக்கிரமே பாயும்' என கஸ்தூரி பற்றி பல கமெண்ட்கள் இணையத்தில் உலா வந்தன. ஆனால், அவை அனைத்தையும் புஸ்ஸென ஆக்கி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து விட்டார் கஸ்தூரி. இதனால் கஸ்தூரி டிவிட்டரில் தான் புலி, பிக் பாஸ் வீட்டில் எலி என எல்லோரும் கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.

எதிர்பார்ப்பு
கமல் ரகசிய அறை வாய்ப்பு தருவதாகக் கூறியும் கூட, அதனை மறுத்து விட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் கஸ்தூரி. கமலுடன் மேடையில் பேசும் போது மீண்டும் பழைய சந்திரமுகியாக மாறி, சக போட்டியாளர்களின் முகமூடியை கிழிக்கும் விதமாகப் பேசினார். இதனால் நிச்சயம் நிகழ்ச்சி ஒளிபரப்பான அன்றோ அல்லது மறுநாளோ கஸ்தூரி மீண்டும் டிவிட்டருக்கு வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்களுக்கு பதில்
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள சாக்ஷி, அபிராமி, மீரா மிதுன், ரேஷ்மா போன்ற போட்டியாளர்கள், தங்களது எவிக்சன் ஒளிபரப்பான அன்றோ அல்லது அடுத்த நாளோ டிவிட்டரில் மீண்டும் பதிவுகள் போட ஆரம்பித்து விட்டனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

நிஜமாகவே சீக்ரெட் ரூம்
ஆனால் டிவிட்டர் புலியான கஸ்தூரியோ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும், இன்னமும் ஒரு பதிவு கூட வெளியிடவில்லை. இது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கஸ்தூரி நிஜமாகவே வேறு ஏதோ சீக்ரெட் ரூமுக்குப் போய் விட்டாரோ என்ற சந்தேகம் தான் ஏற்பட்டுள்ளது.

இதுதான் காரணமா?
உடனே டிவிட்டருக்கு வந்தால், நிச்சயம் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க வேண்டும். அப்போது ஏதாவது பிக் பாஸ் பற்றி வார்த்தையை விட்டு விட்டால் பிரச்சினை. அப்புறம், விதிகளை மீறி விட்டதாக பிக் பாஸ் வழக்குப் போட்டு விடுவார். அதனால் தான் இப்படி அமைதியாக இருக்கிறார் போலும் கஸ்தூரி.

ரகசியங்கள்
ஆனால் எப்படியும் ஒரு நாள் டிவிட்டருக்கு வந்து தானே ஆக வேண்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என நெட்டிசன்கள் காத்திருக்கின்றனர். கஸ்தூரி பேசினால் நிச்சயம் பிக் பாஸ் வீட்டு ரகசியங்கள் பல வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தரி முத்தினால் ஒரு நாள் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும். அதுவரை காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











