கவின் பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததற்கு காரணம் இதுதானாம்.. சண்டையோடு சண்டையாக உளறப்பட்ட உண்மை!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் பிக்பாஸ் வீட்டிகு வந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில் எஞ்சியுள்ளவர்களை வைத்து நிகழ்ச்சியை நகர்த்தி வருகிறார் பிக்பாஸ். அவர்களில் சாக்ஷி, கவின், லாஸ்லியா இடையேயான முக்கோண காதல் கதை பெரும் தீனியாக இருந்தது.

கொளுத்தி போடும் பிக்பாஸ்
ஆனால் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் இந்தக் கதையையே வைத்து ஓட்டி வருகிறார் பிக்பாஸ். இதனால் மக்களுக்கு போரடித்து விட்டது. இருப்பினும் நாளுக்கு நாள எதையாவது ஒன்றை வைத்து கொளுத்திபோட்டு வருகிறார் பிக்பாஸ்.

சந்தைக்கடை சத்தம்
நேற்றைய டாஸ்க்கில் சாக்ஷி ஒரு பக்கம் கத்த, லாஸ்லியா ஒரு பக்கம் கத்த, கவினும் ஒரு பக்கம் கத்திக்கொண்டிருந்தார். ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் கத்த பிக்பாஸ் வீடு சந்தைக் கடையை போல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

காலி செய்ய முடிவு
அப்போது பேசிய கவின், சாக்ஷி வேறு மாதிரி ஆகிவிட்டாள், என்னை காலி செய்ய முடிவு செய்துவிட்டால். இந்த வாரத்துடன் நான் கிளம்பி விடுவேன். அப்படி போகாவிட்டால் அடுத்த வாரம் என்னை நாமினேட் செய்துவிடுங்கள் என்று கூறினார்.

கடனை அடைக்க
மேலும் 7 வாரம் நான் இங்கிருந்தால் என்னுடைய கடன் பிரச்சனை தீர்ந்துவிடும். இப்போது 6 வாரம் ஆகிவிட்டது என்றும் கூறினார் கவின். ஆக கடன் பிரச்சனைக்காக தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததாகவும் சந்தடி சாக்காக போட்டுவிட்டார் கவின்.

அனுதாப ஓட்டு
பிக்பாஸ் வீட்டில் ஏராளமான டிராமாக்கள் நடைபெற்று வருகின்றன. ஓட்டுக்களை பெற்று எப்படியாவது பிக்பாஸ் வீட்டில் சஸ்டைன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒரு டிராமாவை கிரியேட் செய்து வருகின்றனர். கடனில் இருப்பதாக காட்டி அனுதாபத்தை பெற முயற்சி செய்கிறாரா கவின் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











