கக்கூஸ் கவின் சேரன் மேல கோவப்பட்டதற்கு காரணம் இதுதானா? பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் கடந்த சில நாட்களாக சேரனுடன் அதிகம் பேசாமல் அவர் குறித்து பின்னால் பேசி வருவதற்கான காரணம் இப்போது தெரிந்துவிட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், பெண்கள் பின்னாடி சுற்றுவதையே தனது முதல் முழு நேர பணியாக கொண்டுள்ளார். அதுவும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவருடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

சாக்ஷியை காதலிப்பதாக கூறிவிட்டு மனதை அலைப்பாய விட்ட கவின் லாஸ்லியாவுக்கும் பிராக்கெட் போட்டு வருகிறார். இதனால் கடுமையான மன உளைச்சலில் உள்ளார் சாக்ஷி.

பரவும் தகவல்

பரவும் தகவல்

இந்நிலையில் சாக்ஷிக்கு பிக்பாஸ் வீட்டின் பாத்ரூமில் வைத்து உதட்டுடன் உதடு வைத்து கவின் முத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் எடிட்டர்களில் ஒருவர் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

லாஸ்லியாவுடன் க்ளோஸ்

லாஸ்லியாவுடன் க்ளோஸ்

கவின் குறித்த அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சாக்ஷியுடன் நெருக்கமாக பழகிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசிவிட்டு தற்போது அவரை விட்டு விலகி லாஸ்லியாவுடன் கைகோர்த்து சுற்றி வருகிறார் கவின்.

கண்டித்த சேரன்

கண்டித்த சேரன்

தன்னை காதலித்துவிட்டு தன்னுடன் பழகிவிட்டு தனக்கு முத்தம் கொடுத்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கம் காட்டினால் எந்த பெண்ணுக்குதான் கோபம் வராது. கவின், சாக்ஷி மற்றும் அபிராமிக்கு பாத்ரூமில் லிப்லாக் கொடுத்த விவகாரம் சக ஹவுஸ்மேட்டான இயக்குநர் சேரனுக்கு தெரிந்ததாகவும், அதற்காக கவினை சேரன் கண்டித்ததாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேரனை டார்கெட் செய்த கவின்

சேரனை டார்கெட் செய்த கவின்

ஆரம்பத்தில் லாஸ்லியா அப்பா அப்பா என சேரனுடன் நெருக்கமாக இருந்தார். இதனால் கவினும் சேரனுடன் அண்ணன் அண்ணன் என நெருக்கமாக இருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக மீரா மற்றும் சரவணனுடன் சேர்ந்து கொண்டு கவின், கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் சேரனை டார்கெட் செய்து வருகிறார்.

பின்னால் பேசும் கவின்

பின்னால் பேசும் கவின்

நாட்டாமை டாஸ்க்கின் போது கூட சேரனையே அவர் ஜெயிலுக்கு அனுப்ப துடித்தார். மேலும் மீரா சேரன் மீது குற்றச்சாட்டு கூறியபோது கூட, மீராவுக்கு சாதகமாகதான் பேசினார். அப்போது சேரன் பேசியதையும் மீராவிடம் அப்படியே போட்டுக்கொடுத்தார். திடீரென சேரனிடமிருந்து விலகி அவரை பற்றி பின்னால் தரக்குறைவாக பேசி வருகிறார்.

பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு

பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு

சேரன் மீது கவினின் இந்த திடீர் கோபத்திற்கு என்ன காரணம் என பார்வையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். இதற்கெல்லாம் காரணம் கவின் கொடுத்த முத்தம் தான் என்பதும், கவினின் கோபத்திற்கான காரணமும் தற்போது தெளிவாகிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X