Just In
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 11 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Arundhathi serial: அருந்ததி சீரியலில் கோவை சரளா எதுக்கு வந்தாங்க?
சென்னை: சன் டிவியின் பேய் சீரியல் அருந்ததி சீரியல். இந்த சீரியல் ஆரம்பத்தில் முருகன் கோயில், பெரிய முருகன் சிலை, முருகன் பக்தை தெய்வானை.கோயிலைக் கட்டி சிலை அமைத்த ஜாமீன் குடும்பத்தை சேர்ந்த ஈஸ்வரி என்று நன்றாகவே டெலிகாஸ்ட் ஆகிட்டு வந்தது.
அமெரிக்காவில் இருந்து ஈஸ்வரியின் மகன் சண்முகம், தான் அங்கு காதலித்த சுலேகா என்கிற பெண்ணுடன், இங்கு அவளை கல்யாணம் செய்துக்க வர்றான். அவளின் தூண்டுதலால், அருந்ததி பேய் இருந்த கிணற்றுக்கு போட்டு இருந்த மந்திரக் கட்டுக்களை அவிழ்த்து விட்டுடறான்.
இதனால், வெளியில் வந்த அருந்ததிக்கு பெண்ணின் ஆவி, சண்முகத்தின் உடலுக்குள் புகுந்து, தன்னை சீரழிந்த இந்த குடும்பத்தின் ஒரு ஆணையும் உயிரோடு விட மாட்டேன் என்று சபதம் போடுகிறது.

ஈஸ்வரி அம்மா தெய்வானை
சுலேகா ஸ்ஸ்வரி குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் அமெரிக்காவுக்கே போயி விடுகிறாள். இதன் பிறகு முருகன் பக்தையான தெய்வானையை குடும்பத்துக்கு மருமகளா கொண்டு வரணும்னு ஈஸ்வரி அம்மா ஆசைப்படறாங்க. அதற்குள் சண்முகத்தின் உடலில் அருந்ததியின் ஆவி புகுந்துருது. பெண்ணாக நடந்துக்கும் சண்முகத்தின் நடிப்பும் ரசிக்கும்படிதான் இருந்தது. இப்படி சீரியல் தொய்வில்லாமல் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.

சன் டிவிக்கு பயமா
இப்படி நன்றாக சென்றுகொண்டு இருந்த சீரியலில் நடிகை கோவை சரளா இரண்டு சிரிப்பு நடிகர்களுடன் திருடி என்கிற வேடத்தில் அருந்ததி சீரியலில் ஒரு வாரம் நடித்தார்.நிஜமா கோவை சரளாவுக்கு இந்த மாதிரி கதைகளுக்கு லாரன்ஸ் மாஸ்டர் மட்டுமே நடிப்பு சொல்லிக் கொடுக்க முடியும். அதன் மூலம் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை சிரிக்க வைக்க முடியும். ஆனால், அருந்ததிக்கு கோவை சரளாவை எதற்காக வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. சன் டிவிக்கு ரேட்டிங் பயமா என்று தெரியவில்லை.

லாரன்ஸ் மாஸ்டர்
அருந்ததி சீரியலில் கோவை சரளா வந்ததில் சன் டிவிக்கு எந்தவித ரேட்டிங் ஏற்றமும் இல்லை என்பதுதான் உண்மை. அந்த ஒரு வாரமும் யாரும் அருந்ததி சீரியலை அவ்வளவாக பார்க்கவில்லை என்றால் நம்புவீர்களா? கோவை சரளா லாரன்ஸ் மாஸ்டர் சர்க்கசில் ஆட்டி வைக்கும் குரங்கு மாதிரிங்க. அது ஏன் அருந்ததி இயக்குநருக்கு புரியவில்லை.

மிரட்டல் அலட்டல்
இப்போது மீண்டும் அருந்ததி சீரியல் மிரட்டல், அலட்டல் இல்லாமல் நன்றாக ஒளிபரப்பாகிட்டு வருது. திடீர்னு கதையை கெடுத்துக்காதீங்க. சின்னத் திரைக்கு கோவை சரளா வந்தால், அதுவும் பேய் கதையில் வந்தால் லாரன்ஸ் மாஸ்டருடன் வந்தால் மட்டுமே அவரிடம் நகைச்சுவை கலந்த பயத்தை எதிர்பார்த்து சிரிக்கலாம் என்பதை நினைவில் கொள்க.