கவினோட இருந்தது வெறும் ஃபிரன்ட்ஷிப் மட்டும்தானா.. காதலை மறைத்த லாஸ்லியா! என்னாச்சு?

Recommended Video

Bigg Boss 3 Tamil Unseen : கவினை பிரிந்து வருத்தத்தில் இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கவினுடனான காதலை மறைக்கும் வகையில் லாஸ்லியா பேசியது கவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் ஆப்ஷனுடன் கவின், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் அவருடன் காதல் உறவில் இருந்து வந்த லாஸ்லியா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

கவினை போக வேண்டாம் என்று கெஞ்சி மன்றாடிய லாஸ்லியா, கண்ணீர்விட்டும் அழுதார். ஆனால் கவின் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இதுபோன்ற வாய்ப்பு தனக்கு மீண்டும் கிடைக்காது என்று கூறிய கவின் தனது முடிவில் உறுதியாக இருந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

சமாதானப்படுத்திய பிக்பாஸ்

சமாதானப்படுத்திய பிக்பாஸ்

இதனால் அழுது புலம்பி வந்த லாஸ்லியா, இனி இந்த வீட்டில் தன்னால் இருக்க முடியாது என்று கூறி பிக்பாஸிடம் அழுதார். தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்று கேட்டார். ஆனால் இதற்கு உடன்படாத பிக்பாஸ், லாஸ்லியாவை சமாதானப்படுத்தினார்.

பிடித்த நண்பர்கள்

பிடித்த நண்பர்கள்

இந்நிலையில் நேற்று முதல் லாஸ்லியா நார்மல் மூடுக்கு வந்துள்ளார். ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஆடிப்பாடி, பழையப்படி திரும்பியிருக்கிறார். நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அதாவது, வீட்டில் இருந்து வெளியேறிய தங்களுக்கு பிடித்த நண்பர்கள் குறித்து பகிர்ந்து கொள்ளலாம் என கூறப்பட்டது.

அபியுடன் தொடரும்

அபியுடன் தொடரும்

இதனை தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களின் நண்பர்கள் குறித்து பேசினர். அப்போது பேசிய லாஸ்லியா முதலில் தனது தோழியான அபிராமி குறித்து பேசினார். அபிராமியுடன் எப்போதும் ஒரு நல்ல ஃபிரன்ட்ஷிப் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வெளியே சென்ற பிறகு

வெளியே சென்ற பிறகு

பின்னர் சேரன் குறித்து பேசிய லாஸ்லியா, அவரை தான் தவறாக புரிந்து கொண்டதாக கூறினார். இதற்காக சேரனிடமும் அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்ட லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு, சேரனையும் அவரது குடும்பத்தையும் சந்திப்பதாக தெரிவித்தார்.

ஃபிரன்ட்ஷிப்பை மதிக்கிறேன்

ஃபிரன்ட்ஷிப்பை மதிக்கிறேன்

இதனைத்தொடர்ந்து கவின் குறித்து பேசினார் லாஸ்லியா. அப்போது வார்த்தைக்கு வார்த்தை கவினுடன் இருந்தது ஃபிரன்ட்ஷிப் என்று கூறினார். முதலில் கவினை பிடிக்காமல் இருந்தது, பின்னர்தான் பிடிக்கதொடங்கியது என்றார். பல இடங்களில் கவின் தனக்காக ஸ்டான்ட் செய்திருப்பதாகவும், கவினுடனான அந்த ஃபிரன்ட்ஷிப்பை மதிப்பதாகவும் கூறினார் லாஸ்லியா.

ஏன் மறைக்கிறார்?

ஏன் மறைக்கிறார்?

வெளியே வந்த பிறகு சந்திக்கிறேன், பேசுகிறேன், மிஸ் யூ கவின் என்றார் லாஸ்லியா. ஆனால் ஒரு இடத்தில் கூட கவினை காதலிப்பதாக கூறவில்லை, கவினுடன் இருந்த ரிலேஷன்ஷிப் வெறும் நட்புதான் என்ற ரீதியிலேயே பேசினார் லாஸ்லியா. இதனை கவனித்த பார்வையாளர்கள் லாஸ்லியா ஏன் கவினுடனான காதலை மறைக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கழட்டிவிட்ட லாஸ்லியா

அபிராமி முகெனை காதலிப்பதாக எல்லோர் முன்பும் கூறினார். சாக்ஷி கவினுக்காக ஃபிலிங்ஸை வளர்த்துக்கொண்டதாக எல்லோருக்கும் முன்பாக கூறினார். ஆனால் லாஸ்லியா கவினை யூஸ் பண்ணிட்டு இப்போ நல்ல பிரன்ட்ஸ் என்று கழட்டி விடுகிறார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கெட்டப் பெயர் கிடைக்கும்

பெற்றோருக்கு கெட்டப் பெயர் கிடைக்கும் என்பதால் லாஸ்லியா ஓபனில் சொல்லவில்லை என்று கூறுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X