மக்களே இப்போ புரியுதா? மீரா ஏன் தர்ஷன காதல்ன்னு சொல்லி வலைக்க பார்த்ததுன்னு!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 22 : Promo1 : மீரா தர்ஷனை காதலித்தால் ஷெரினுக்கு என்ன?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா ஏன் காதல் என்ற வட்டத்துக்குள் தர்ஷனை இழுத்துவர முயன்றார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக பங்கேற்றவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்கள் அவர் அடியெடுத்து வைத்த நாள் முதலே பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.

ஏற்கனவே அவர் ஒரு மோசடி பேர்வழி என்ற பெயர் உள்ளது. மீரா மிதுன் மீது பண மோசடி புகார்களும் உள்ளன. வெளியில் மீரா மிதுனின் பெயர் நாறிக்கொண்டிருக்கிறது.

முட்டை வாங்கும் மீரா

முட்டை வாங்கும் மீரா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்துள்ள வாய்ப்பை அவர் டேமேஜ் ஆன தனது பெயரை சரி செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் முட்டையே வாங்கி வருகிறார் மீரா.

மகா மட்டம்

மகா மட்டம்

எல்லோரிடமும் வாக்குவாதம் செய்து வரும், யார் சொல்வதையும் கேட்காமல் தான்பாட்டுக்கு கத்திக்கொண்டிருக்கிறார். சேரனின் வயதுக்கு கூட மதிப்பு கொடுக்காமல் மகா மட்டமாக நடந்து கொள்கிறார் மீரா.

அம்மாக்கிட்ட பேசு

அம்மாக்கிட்ட பேசு

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாக உள்ள தர்ஷனை காதலிப்பதாக கூறி வந்தார். உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என் அம்மாவிடம் வந்து பேசு என்றும் கூறினார் மீரா.

என்னை காதல் செய்

என்னை காதல் செய்

ஆனால் மீராவின் காதலை தர்ஷன் ஏற்கவில்லை. எனக்கு வெளியில் க்ரஷ் இருக்கிறது இந்த டாப்பிக்கை விட்டுவிடு என கூறிவிட்டார். அதையும் ஏற்காத மீரா, வெளியில் இருப்பது க்ரஷ்தானே, என்னை காதல் செய் என்றார்.

ஹவுஸ்மேட்ஸ் அச்சம்

ஹவுஸ்மேட்ஸ் அச்சம்

ஆனால் தர்ஷன் இன்ட்ரஸ்ட் காட்டவில்லை. இந்த விவகாரம் கமல்ஹாசன் வரை சென்றது. ஒவ்வொரு விஷயத்தையும் மாற்றி மாற்றி பேசி வருகிறார் மீரா. இதனால் ஹவுஸ்மேட்டுகள் அவருடன் பழகவே அச்சப்படுகின்றனர்.

உளறிய மீரா

உளறிய மீரா

இந்நிலையில் தர்ஷனை காதல் வலைக்குள் வீழ்த்த முயன்றது ஏன் என மீரா நேற்று தனது வாயாலேயே உளறிவிட்டார். அதவாது பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் படி உங்களுக்கு கடுமையான போட்டியாளர் யார் என்றும் நீங்கள் எல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்றும் இரண்டு கேள்விகள் மீராவுக்கு கொடுக்கப்பட்டன.

சேரனிடம் ஒன்றும் இல்லை

சேரனிடம் ஒன்றும் இல்லை

அதற்கு பதிலளித்த மீரா எனக்கான கடுமையான போட்டியாளர் தர்ஷன் என்றார். சேரனை நீங்கள் எல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை. என்னுடன் போட்டி போடும் அளவுக்கு சேரனிடம் ஒன்றுமே இல்லை என்றும் கூறினார் மீரா.

பெயரை கெடுக்க வேண்டும்

பெயரை கெடுக்க வேண்டும்

தர்ஷன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவதற்கான சகல தகுதிகளையும் பெற்றுள்ளார். ஃபாத்திமா பாபு உட்பட ரசிகர்கள் அனைவரும் தர்ஷனுக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அலர்ட்டான மீரா, எப்படியாவது தர்ஷனுடன் ஒன்று நெருக்கம் காட்ட வேண்டும் இல்லை அவரது பெயரை டேமெஜ் செய்ய வேண்டும் என்ற ஸ்ட்ரெட்டர்ஜியை கையில் எடுத்துள்ளார்.

நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

அதற்காகவே முதலில் காதல் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தார் மீரா. அது கைகொடுக்கவில்லை என்பதால் காதலித்து ஏமாற்றிவிட்டார் தர்ஷன், தர்ஷன் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்று கூறி அவரது பெயரை நாமினேட் செய்தார்.

சம்மனே இல்லாமல் ஆஜர்

சம்மனே இல்லாமல் ஆஜர்

ஆக விளையாட்டை சரியாக புரிந்து கொண்டு தவறாக விளையாடி வருகிறார் மீரா. மேலும் பிக்பாஸ் வீட்டின் அடுத்த வனிதாவாக தான்தான் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். இதனால்தான் சம்மனே இல்லாமல் மது, சரவணன் இடையிலான பிரச்சனையில் நேற்று ஆஜராகி சரவணனை தன்பக்கம் இழுக்க பார்த்தார் மீரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X