Bigg Boss 8: அர்ச்சனாவுக்கு அள்ளிக் கொடுத்தாங்க.. முத்துவுக்கு பரிசுத்தொகை குறைய காரணம் இதுதானா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கியது. அந்த ஆண்டு முதல் 8வது சீசன் வரை டைட்டில் வின்னருக்கான பரிசுத்தொகை 50 லட்சம் என்பதிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து ஆட்டத்தில் அதிரடி காட்டிய அர்ச்சனாவுக்கு 50 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடுதல் பரிசுகள் பலவும் குவிந்த நிலையில், இந்த சீசன் டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு விஜய் டிவி பரிசுத்தொகையை குறைத்து வழங்கியது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பணப்பெட்டியை போட்டியாளர்கள் சிலர் தட்டிச் சென்ற நிலையில், முத்துக்குமரனுக்கு பரிசுத்தொகையில் பிக் பாஸ் குழு கை வைத்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு அர்ச்சனாவின் பரிசுத் தொகையில் அப்படி எதுவும் செய்யவில்லையே என்றும் முத்துக்குமரனுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்கிற கேள்விகளையும் பிக் பாஸ் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

bigg boss tamil 8 muthukumaran 8

ஆனால், விஜய் டிவி இந்த முறை பரிசுத் தொகையில் கைவைக்க முக்கிய காரணமே இதுதான் என்றும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்காமல் போனதற்கும் காரணம் அதுதான் என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

அர்ச்சனாவுக்கு அள்ளிக் கொடுத்தாங்க: பூர்ணிமா ரவி 16 லட்சம் பணப்பெட்டியுடன் சென்ற போதிலும், பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனா ரவிக்கு பரிசுத்தொகையில் கை வைக்காமல் 50 லட்சம் பரிசுத் தொகையும் 15 லட்சத்தில் நிலமும் ஒரு சொகுசு காரும் பரிசாக கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை முத்துக்குமரனின் பரிசுத் தொகை ரசிகர்களை ரொம்பவே ஷாக்காக்கி உள்ளது.

முத்துக்குமரன் பரிசுத்தொகையில் கை வச்சிட்டாங்க: முத்துக்குமரன் 50 ஆயிரம் ரூபாய்க்கான பணப்பெட்டியை முதல் நபராக ஓடி ஜெயித்தார். அதன் பின்னர் பவித்ரா, ரயான் தலா 8 லட்சம் பரிசுத் தொகையும் விஜே விஷால் 5 லட்சம் பணப்பெட்டியையும் எடுத்துக் கொண்ட நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட முத்துக்குமரனுக்கு விஜய் சேதுபதி வழங்கிய பரிசுத்தொகையில் வெறும் 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது. வேறு எந்த பரிசுத்தொகையையும் கிராண்ட் ஃபினாலேவில் விளம்பரதாரர்கள் மற்றும் விஜய் டிவி கொடுக்காதது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே புல்லட் பைக் ஒன்றை மட்டும் போட்டியில் ஜெயித்து முத்துக்குமரன் வென்றது தனிக்கதை.

bigg boss tamil 8 muthukumaran 8

டிஆர்பி ரேட்டிங் குறைவு: முத்துக்குமரனுக்கு பரிசுத் தொகை குறைவாக கொடுக்கப்பட்டது மட்டுமின்றி கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்காமல் போக முக்கிய காரணமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் தாறுமாறாக குறைந்து விட்டது என்பது தான் என சில தகவல்கள் கசிந்துள்ளன. அதன் காரணமே பணப்பெட்டி டாஸ்க்கை வைத்து மற்ற போட்டியாளர்களையும் திருப்திப்படுத்தி கடைசியாக முத்துக்குமரன் பரிசுத்தொகையிலும் பிக் பாஸ் டீம் கை வைத்துவிட்டது என்கின்றனர். எப்படி இருந்தாலும், முத்துக்குமரனின் தினசரி சம்பளத்துடன் சேர்த்து அவருக்கு பெரிய தொகை கிடைத்திருக்கும் என்கின்றனர். விஜய் சேதுபதிக்கும் இந்த சீசனில் சம்பளம் குறைவு தான் என்கின்றனர். அடுத்த சீசனிலாவது டைட்டில் வின்னர் பரிசுத் தொகையில் கை வைக்காமல் இருந்தால் சரி என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X