Just In
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 11 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Kanmani serial: முத்துச்செல்வி அப்பா ஏன் இப்படி இருக்கார்?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வியின் அப்பா வீரையன்,தேவை இல்லாத நேரத்தில் அவளை அடித்து, தான் என்னவோ நல்ல அப்பா போல நிலை நிறுத்த முயற்சிக்கிறார்.
சின்னவர் தன்னை வெறுத்து ஒதுக்கி, சவுந்தர்யா அம்மாவை கல்யாணம் செய்துக்கணும் என்று மட்டுமின்றி, பெரிய அம்மாவின் மரியாதையையும் குடும்பத்தில் நிலை நாட்டிவிட்டு ஒதுங்கிக்கணும் என்று முடிவெடுத்து அதன் படி காய் நகர்த்துகிறாள்.
அவளொன்று நினைக்க, வேறொன்று நடந்தாலும் அவள் எதிர்பார்த்தபடி சின்னவரின் கண்ணில் தன் மீதான வெறுப்பை கண்டுவிட்டதாக துன்பத்திலும் இன்பம் காண்கிறாள். இப்படிப்பட்ட பக்குவம் சிலருக்கு சின்ன வயத்தில் வந்து விடுகிறது.

கிருஷ்ணவேணி அம்மா
எஜமானி விஜயலட்சுமி அம்மாவை, அவங்க ஓர்படி கிருஷ்னவேணி அமமா மதிக்கறதில்லை.அவங்க பேரிலிருக்கும் வீட்டை எழுதி வாங்க துடிக்கறாங்க.. இதை விஜயலட்சுமி அமமா யாரிடமும் சொல்லாமல் தவிக்கறாங்கன்னு முத்துச்செல்வி தெரிஞ்சுக்கறா. தனக்கும், சின்னவருக்கும் கல்யாணம் நடப்பதை விட ,சவுந்தர்யா அம்மாவுக்கும், சின்னவருக்கும்தான் கல்யாணம் நடக்கணும், கிருஷ்ணவேணி அம்மாவுக்கும் ஒரு முடிவு கட்டணும் என்றுதான் பல்வேறு விதத்தில் குற்றம் சுமத்தி, கிருஷ்ணவேணி அம்மாவை பஞ்சாயத்துக்கு இழுக்கிறான்.

வாக்கு சின்னவரு
சின்னவரு தன்னைக் கட்டிக்கறதா வாக்கு குடுத்துட்டார். .ஆனால், சவுந்தர்யா அம்மா சின்னவர் மனசு முழுக்க நிறைஞ்சு இருக்காங்க. .அதே மாதிரி சவுந்தர்யா மனசு முழுக்க சின்னவரு நிறைஞ்சு இருக்கார்னு தெரிஞ்சுக்கிட்ட முத்துச்செல்வி இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கறதுதான் சரின்னு முடிவுக்கு வந்திருக்கா. ஆனால், சின்னவரு வாக்குத் தவறாதவர் ஆயிற்றே.அவர் மனசில் தன் மீது வெறுப்பு வந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று நினைத்துதான் எடுத்ததுக்கு எல்லாம் குற்றம் கண்டு பிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறாள் முத்து.

தங்கம் செருப்பு
தங்கை தங்கத்தை கிருஷ்ணவேணி அம்மா வேண்டும் என்றே செருப்பு துடைக்க சொல்ல, இதில் பொங்கி எழுகிறாள முத்துச்செல்வி.இதில் ஆரம்பித்த கோபம், சண்டை, பஞ்சாயத்துக்கு போகும்வரை கொண்டு விட்டதோடு, பஞ்சாயத்துக்கு கிருஷ்ணவேணி அம்மா வர மறுக்க, இது போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகுது. முத்துச் செல்வியிடம் சின்னவர் கண்ணன் இந்த பஞ்சாயத்தை தவிர்க்க எத்தனை முறை கேட்டும்,முத்து கேட்காமல் கூட்டியதில், இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை போக வேண்டியதாகி விட்டது.இந்த வெறுப்பை மனசில் வச்சு, சின்னவர் முத்துவைப் பார்க்கிறார்.

வெறுப்பு பார்வையில்
சின்னவர் தன்னைப் பார்த்த பார்வையில் வெறுப்பை கண்டுவிட்டதாக துன்பத்திலும் இன்பம் காண்கிறாள் முத்து.சின்னவரே உங்க பார்வையில் நான் வெறுப்பை பார்த்துட்டேன் சின்னவரே..இனி உங்களுக்கும், சவுந்தர்யா அம்மாவுக்கும்தான் கல்யாணம் நடக்கும்.எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்று சொல்லிக் கொள்கிறாள்.
சின்னவரை காதலித்தபோது, ஒரு வார்த்தை கடிந்து பேசாத, அந்தஸ்த்தைப் பற்றி கூட பேசாமல் கையாலாகாத தனமாக இருந்துவிட்டு, இப்போது முத்து நல்லது செய்யும்போது,பேசாமல் ஊரை விட்டு போயிருக்கலாம்.. அவங்க குடும்பத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து விட்டுட்டியே பாவி பாவி என்று முத்துவைப் போட்டு அடிக்கிறார் ஐயன் வீரையன்.
ஆமாம், முத்துச்செல்வி அப்பா இரண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டும், ஏன் இப்படி இருக்கார்?