அச்சச்சோ... இதுக்காகத்தான் நீலாம்பரி வீரபத்ரனை பார்த்து பயந்தாங்களா...?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி எதுக்காக வீரபத்ரனை பார்த்து பயந்தாங்க.. அவனுக்கு கேட்கறப்போ எல்லாம் பணம் எதுக்கு குடுத்தாங்கன்னு இப்போ தெரிஞ்சு போச்சு.
நிலாவின் அப்பா ஸ்ரீதரை நீலாம்பரி பவானியா இருந்தப்போ, வீரபத்ரனை பக்கத்துல வச்சுக்கிட்டு கொன்னுடறாங்க. இப்போ பவானி நீலாம்பரியா ஆனவுடன் வீரபத்திரன் மிரட்டி மிரட்டி பணம் வாங்கறான்.

இந்த சமயத்துலதான் மறுபடியும் வீரபத்ரனின் துணை தேவைப்படுது நீலாம்பரிக்கு. நிலாதான் ஸ்ரீதரோட பொண்ணுன்னு தெரிஞ்சதுனாலதான், நிலாவை தன வீட்டு மருமகளாக்கிக்க துடிக்கறாங்க.
முக்கியமா ஸ்ரீதர் உஷாரா தன் பேரிலிருக்கும் சொத்துக்கள் தன்னுடைய பெண்ணுக்குத்தான் சேரும்னு உயில் எழுதி வச்சுடறார்.

அதனாலதான் நிலாவை தன் மகன் சஞ்சய்க்கு பேசி,அது நின்னு போக, இப்போ தன் தம்பி அசோக்குக்கு கல்யாணம் முடிச்சு,அவளின் எல்லா சொத்தையும் அடைய நினைக்கறாங்க.
இது நடக்கணும்னா நிலாவின் காதலன் கார்த்திக் உயிரோட இருக்க கூடாதுன்னு நீலாம்பரி முடிவு எடுக்கறாங்க. அதுக்கு வீரபத்ரன் துணை தேவைப்படுது. வீரபத்ரன் வீட்டுக்கு வந்து கார்த்திக்கை கொன்னுடுன்னு சொல்றாங்க.

நிலா அம்மா எங்க இருக்கான்னு தெரியலை.. அதையும் கண்டு பிடிப்பேன்னு வீட்டுக்கு வந்து தனக்குத் தானே சொல்றாங்க. அந்த நேரம் பார்த்து ரேவதி காபின்னு குடுக்க அதைத் தட்டி விடறாங்க நீலாம்பரி. ரேவதிதான் நிலாவின் அம்மாவும் நீலாம்பரி விரும்பிய ஸ்ரீதரின் மனைவியும்னு அவங்களுக்கு இன்னும் தெரியலை.


Click it and Unblock the Notifications











