twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Celebrities: ஆமா.. டிவியில் வர்ற பிரபலங்களின் நிகழ்ச்சிகளை ஆவலோடு பார்ப்பது ஏன்?

    |

    சென்னை: சின்னத்திரை மற்றும் பெரிய திரையின் பிரபலங்கள் நேர்காணல் கொடுத்தாலும், அல்லது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்.

    அது மட்டுமில்லை, சூர்யா ஜோதிகா திருமணம், பிரசன்னா சிநேகா திருமணம் போன்ற விஷயங்களில் ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காண்பித்தார்கள். தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பினால் அல்லது செய்தியில் காண்பித்தாலும் மக்கள் விரும்பிப் பார்த்து ரசித்தார்கள்.

    அதனால்தான் சின்னத்திரை சேனல்கள் எப்போதும், பிரபலங்களை வைத்தே ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். ரேட்டிங்கும் கிடைத்து வருகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

     கேரக்டராகவே பார்த்து

    கேரக்டராகவே பார்த்து

    எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் சின்னத்திரை சேனல்கள் இல்லை. ஒரே ஒரு அரசு தொலைக் காட்சியும் ஆரம்பித்த காலத்தில் சென்னை போன்ற மாநிலத்தின் தலைமை நகரங்களில் மட்டுமே தெரியும். அதிலும் சிவாஜி கணேசன் போன்ற பெரிய நடிகர்களின் நேர்காணல் ஒளிபரப்பானதா, அந்த அளவுக்கு அவர்கள் நேரத்தை தொலைக் காட்சிக்கு ஒதுக்கினார்களா என்பது தெரியவில்லை.

    புகைப்படம் பேட்டிகள்

    புகைப்படம் பேட்டிகள்

    ஒரு நடிகர் நடிகையின் பேட்டியையோ, அல்லது அவர்களின் நிஜமான புகைப்படத்தையோ பார்க்க வேண்டும் என்றால் பத்திரிகைகளில் மட்டுமே பார்க்க முடியும். அப்போதும் கூட அவர்கள் பழகும் விதம், பேசும் மேனரிசம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க முடியாது. ரசிகர்கள் இப்படி பிரபலங்களை கேரக்டராகவே பார்த்து விடுவதால் அவர்களின் நிஜ பேச்சுக்கள், மனிதத்தன்மை இவற்றை அறிய முடிவதில்லை.

    கலைஞர் மக்கள் திலகம்

    கலைஞர் மக்கள் திலகம்

    மக்கள் திலகம் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி இவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டு இருந்ததால் மக்களுக்கு அடிக்கடி அவர்கள் நிஜத்தில் எப்படி பேசுவார்கள், மக்களிடம் எப்படி பழகுவார்கள் என்று தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களை உண்மையாக நினைத்து அதாவது நிஜத் தன்மையை அறிந்து தொண்டர்கள் அவர்களுக்கு இன்னும் இன்னும் என்று கூடிப் போனார்கள்.

    ரஜினி கமல் கூட இல்லையே

    ரஜினி கமல் கூட இல்லையே

    அவ்வளவு ஏன் தமிழகத்தில் சன் டிவி ஆரம்பித்த காலக் கட்டங்களில்கூட விஜயகாந்த், கமல்ஹாசன்,ரஜினிகாந்த் நேர்காணல் என்பது அவ்வளவாக இல்லை. விஜயகாந்த் மக்கள் மத்தியில் வந்தார், செல்வாக்கு பெற்று நல்ல அரசியல் தலைவர் என்று அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவும் செய்தனர்.

    பிரபலங்கள் ஆனாலும்

    பிரபலங்கள் ஆனாலும்

    இப்படி எப்படிப்பட்ட பிரபலங்கள் ஆனாலும் தொலைக்காட்சி,அல்லது நேரில் காட்சி தரும் போது மக்கள் அதை ஆவலாக பார்ப்பதற்கு காரணம், அவர்களின் நிஜத் தன்மையை அறியத்தான். இந்த ஆர்வம் இப்போது சின்னத்திரை சீரியல் நடிகர், ,நடிகைகள் வரை மக்களுக்கு வந்துள்ளது. எனவேதான் மக்களின் நாடியைப் பிடித்துத் தெரிந்துகொண்ட சேனல்கள், எந்த ரியாலிட்டி ஷோக்கள் நடத்தினாலும், அதில் பிரபலங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன..!

    English summary
    The popularity of the icon and big screen celebrities, whether interviewed or attending reality shows.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X