For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Azhge serial: சுதாவும் ரவியும் ஆசை ஆசையாய் நெருங்க... இந்த பூர்ணா இப்படியா?

|

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் சுதாவும், ரவியும் ஆசைஆசையாய் நெருங்கும் நேரத்தில், பூர்ணா ஏதாவது செய்து இருவரையும் ஒன்று சேர விடாமல் தடுத்துடறா. இதே தொடர்ந்து கொண்டு இருக்க, இன்னும் சுதா இது பூர்ணாவின் வேலைதான் என்று கண்டு பிடிக்கவில்லை.

சுதாவும், பூர்ணாவும் ஜென்டில் பேருக்குள்ளும் இருக்கும் கோல்டன் வாரை யாருக்கும் தெரிவிக்க கூடாது, இருவரில் யார் வல்லவரோ, அவர்கள் மற்றவரின் சதியை முறியடிக்கலாம் என்று.

சதி என்னவென்றால், அழகம்மை குடும்பத்தை திசைக்கு ஒருவராக சிதறும்படி செய்வேன் என்று சபதம் போடுகிறாள் பூர்ணா. இந்த வாக்குறுதியை தனது அம்மா சகுந்தலா தேவியிடம் கொடுத்துவிட்டுத்தான் மறுபடியும் பெட்டியுடன் கிளம்பி இந்த வீட்டுக்கு வாழ வந்து இருப்பதாக பூர்ணா சுதாகிட்ட சொல்றா.

சகுந்தலா தேவி பூர்ணா

சகுந்தலா தேவி பூர்ணா

சகுந்தலா தேவியின் மகள்தான் பூர்ணான்னு தெரிஞ்சதும், மகேஷை விட்டுட்டு பூர்ணா சகுந்தளா தேவி வீட்டுக்கு போயிடறா. மகேஷுக்கு டைவர்ஸ் நோட்டீஸும் அனுப்பிடறா. ஆனால், பூர்ணாவின் தம்பி மதன் அழகம்மையின் மகள் காவ்யாவை கல்யாணம் செய்து கொண்டு, காவ்யா வீட்டில் செட்டிலாகிவிட, தனது தம்பியை வீட்டுக்கு அழைச்சுட்டு வரணும், அழகம்மை குடும்பத்தை சிதைக்கணும்னு சொல்லியே பெட்டியுடன் நல்லவள் போல மகேஷ் கூட வாழறேன்னு வீட்டுக்கு வர்றா.

பேசியதை சுதா

பேசியதை சுதா

சகுந்தலா தேவியிடம் பூர்ணா தான் இந்த வீட்டுக்கு வந்த நோக்கம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும்போது, சுதா கேட்டுடறா. அப்பபோதுதான் ரெண்டு பேரும் ஜென்டில் உமன் அக்ரிமென்ட் போட்டுக்கறாங்க. இந்த குடும்பத்தை சிதைப்பேன்னு பூர்ணா சொல்ல, இல்லை அதை நான் முறியடிச்சு அழகம்மை குடுமப்த்தை காப்பேன்னு சுதா சபதம் போடறா. இவங்களுக்குள்ள யுத்தம் ஆரம்பிக்குது.

சுதா ரவி

சுதா ரவி

ரவியின் நண்பன் கைக் குழந்தை வைத்திருக்கும் மனைவி சுதாவை விட்டுட்டு, விபத்தில் இறந்து விடுகிறான். சுதா கணவன் இறந்த கையோடு, பல இன்னல்களுக்கு ஆளாக ரவி சுதா கழுத்தில் இரண்டாவது தாலி கட்டிடறான்.ஆனால், இருவருமே இன்னும் சேர்ந்து வாழாமல் இருக்காங்க. ரவி நெருங்கும் நேரத்தில் எல்லாம் சுதா வேணாம், வேணாம்னு ஏதாவது சரியான காரணம் சொல்றா. ரவியும் விட்டுவிடுகிறான்.

அப்பு என்னாவது

அப்பு என்னாவது

ஒரு நாள் ரவி ஆசையாய் சுதாவை நெருங்க, அவள் விலகிப் போகும் போது, ரவிக்கு கோவம் வருது. விசாரிக்கும் போதுதான் இன்னொரு குழந்தை பிறந்தால் இப்போது அப்புக்கு கிடைக்கும் பாசம் கிடைக்குமான்னு தெரியலை. அதான் எனக்கு பயமா இருக்குன்னு சொல்றா. அப்போ எனக்குன்னு ஒரு குழந்தை பெத்து குடுக்க மாட்டியான்னு கோவத்துல கத்திடறான் ரவி. அன்றிலிருந்து இருவருக்குள்ளும் ஏற்பட்ட விரிசலை அப்புவின் பிறந்த நாள் சரி செய்கிறது.

சுதா அழகம்மை

சுதா அழகம்மை

அழகம்மை சுதாவின் ரூமுக்கு போயி, சுதா உன் கஷ்டம் எனக்கு புரியுது. இப்போதான் ரவி மேலே முழுசா உனக்கு நம்பிக்கை வந்து இருக்கு.ரவி மேல ஆசையும் வந்து இருக்கு.இனி அப்பு எங்க ரூமில் தூங்கட்டும்னு சொல்லி, மல்லிகைப் பூவை அவள் கையில் கொடுத்துட்டு, அப்புவைத் தூக்கிகிட்டு போயிடறாங்க. அந்த இரவு ரவியும் சுதாவும் ஆசை ஆசையாய் நெருங்கும் போது பூர்ணா திட்டமிட்டு, கீழே விழுந்தவள் போல நடிச்சு இருவரும் நெருங்குவதை கெடுத்துடறா.

வண்டியை தேட விட்டு

வண்டியை தேட விட்டு

மறுநாள் இரவு ரவியின் வண்டியை ஆளை வச்சு தூக்கவிட்டு, இரவு முழுக்க ஒருவனை வண்டி இங்கே இருக்கு, அங்கேயிருக்குன்னு போன் செய்ய வச்சு அலைக்கழிக்கறா. அன்று இரவும் மல்லிகைப் பூவை ரவி தலையில் வச்சுவிட்டு நெருங்கும் வேளையில்தான் பூர்ணா திட்டமிட்டு இந்த வேலையை செய்யறா.

பார்க்கலாம் எத்தனை நாளைக்குத்தான் பூர்ணா இப்படித் திட்டம் போடுகிறாள் என்று.

English summary
Sun TV's azhagu serial, Sudha and Ravi are approaching the point, Purna is not doing anything to keep the two together. To keep up with this, Sudha did not find this to be the work of Purna.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more