நடிப்பின் அழகு வடிவுக்கரசி.. ராதிகா கண்ணில் படாமல் போனது ஏனோ!
சென்னை: ராதிமான்னு ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ராதிகா ஆரம்பத்துலேர்ந்தே கல கல டைப்தான். சின்ன வயசிலிருந்து ஸ்ரீபிரியா ராதிகாவின் உயிருக்கு உயிரான தோழி.
நடிக்க வந்த பிறகு ராதிகா, ஸ்ரீப்ரியா, சரிதா, வடிவுக்கரசி, சுஹாசினி 5 பேரும் திக் ஃபிரண்ட்ஸா இருந்தாங்க. சுஹாசினி வேற லெவல், ராதிகாவுடன் மட்டும் மிக நெருக்கமாக இருந்தவர். போகப் போக இருவரின் நெருக்கமும் குறைந்து போனது என்னவோ உண்மைதான்.

சரிதா, ஸ்ரீபிரியா நெருக்கமானவர்கள் என்றாலும், ஸ்ரீபிரியாவுக்கு ராதிகா மேல தனி பாசம் உண்டு. நடிகை லதா நடித்த காலக்கட்டத்தில் கொஞ்ச காலம் ராதிகாவும் நடித்ததில் லதா மேல ரொம்ப பிரியம் ராதிகாவுக்கு.

இப்படி இருந்தவர்கள்தான் ஒரு காலத்தில் நடிகை வடிவுக்கரசியை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். அவரும் பெரிய திரை சின்னத்திரையில் நடிப்பது என்று தனித்து கோலோச்சினார். முதல் மரியாத இவரது வாழ்க்கையை திருப்பிப் போட்ட படம் என்று சொல்லலாம்.

சின்னத்திரையில் வடிவுக்கரசி நடிப்பில் பின்னி பெடலெடுப்பார். திருமதி செல்வம் சீரியல் இவருக்கு ஒரு சின்ன மகுடத்தையே சூட்டியது எனலாம். இப்படிப்பட்ட வடிவுக்கரசிக்குத்தான் ராதிகா தனது ரடான் தயாரிப்புக்களில் ஒன்றில் கூட நடிக்க வாய்ப்பு தரவில்லை.
லதா, சரிதா, ஸ்ரீபிரியான்னு எல்லாருக்கும் வாய்ப்பு தந்த ராதிகா வடிவுக்கரசியை கண்டுகொள்ளாமல் போனது ஏனோ? இப்போது ராதிகா சரிதா தங்கச்சிக்கு சந்திரகுமாரி சீரியலில் தனக்கு பதிலான வாய்ப்பை தந்திருக்கார்.


Click it and Unblock the Notifications











