Bigg boss:பிக் பாஸ் வீட்டிலிருந்து.. ரஜினி படம் ஏன் தூக்கப்பட்டது தெரியுமா?

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி இன்றோடு மூன்றாவது நாள்.

இந்த முறை கண்டெஸ்டண்ட் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வந்து இருப்பது சிறப்புதான் என்றாலும், ரொம்ப சின்ன பொண்ணுங்க கலந்துக்காதது பசங்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

சாக்க்ஷி அகர்வால்,அபிராமி,ஷெரின் எடுத்த எடுப்பில் ரொம்ப நெருக்கமாகியது பிக் பாஸ் கைங்கர்யமாக இருக்குமோ?

பல விஷயங்களின் பிரதிபலிப்பு

பல விஷயங்களின் பிரதிபலிப்பு

பிக் பாஸ் வீட்டில் இந்த முறை பல வித்தியாசங்கள் செய்திருக்காங்க. தண்ணீர் சிக்கனம், எரி பொருள் சிக்கனம் இவற்றை வலியுறுத்தி, வீட்டில் இருப்பவர்களுக்கு அறிவுறுத்தியும் இருக்கிறார்கள். வீட்டின் சுவர்களில் அங்கங்கே ஆன்மீகம் மற்றும் கலாச்சார ஓவியங்கள், கருத்தோவியங்கள் என்று கலக்கல் செட்டில் வீடு அமைந்து இருக்கிறது. அதோடு அன்றாட மனிதர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையிலும் மிக அருமையாக பார்த்து பார்த்து வீட்டை வடிவமைத்து இருக்கிறார்கள்.

விருமாண்டி பாதி முகம்

விருமாண்டி பாதி முகம்

வீட்டினுள் அடி எடுத்து வைத்து சில அடிகளில் ஒரு ஸ்தூபியில் விருமாண்டி கமலின் பாதி முகம், அதற்கு இடது பக்கம் இருந்த ஸ்தூபியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமும் வைத்து இருத்திருக்கிறார்கள். வீட்டினுள் பத்திரிகையாளர்கள் ஒரு நாள் வாசத்தின் போது இருந்த அந்த படம், பிக் பாஸ் வீட்டாளர்கள் குடி ஏறுவதற்குள் அகற்றப்பட்டு விட்டது. இப்போது பிக் பாஸ் வீட்டில் விருமாண்டி கமல் படம் மட்டுமே உள்ளது.

சொன்னது கமலா

சொன்னது கமலா

ரஜினி படம் இருக்க கூடாது என்று கமல் கட்டளை போட்டதாகவும், படம் உடனடியாக அகற்றப்பட்டதாகவும் சலசலப்பு எழுந்த நிலையில் அப்படி இல்லை என்கிறார்கள்.கமல் சொல்லித்தான் பிக் பாஸ் வீடே வித்தியாசமாக கட்டமைக்கப்பட்ட நிலையில், அவருக்கு தெரியாமல் அவரிடம் கேட்காமல் ரஜினி படத்தை எப்படி அவ்வளவு அழகாய் வைத்திருப்பார்கள். இதெல்லாம் பொய் என்று குமுறுகிறார் ஒரு பத்திரிகையாளர்.

இதுதான் விஷயம்

இதுதான் விஷயம்

கமல் படம் வைத்திருந்ததை போல மிகப் பிரமாண்டமாய் ரஜினி படமும் வைத்திருந்தார்களாம். வந்திருந்த பத்திரிகை மீடியா துறையை சேர்ந்தவர்கள் இதை வெளியில் சொல்ல., முக்கியமாக சன் டிவி சேனலை சேர்ந்தவர்கள் தங்கள் தலைமையிடம் சொல்ல, அப்போதுதான் தெரிந்து இருக்கிறது இவர்கள் வைத்திருக்கும் உரிமை பெற்ற ரஜினி படத்தின் ஸ்டில்லை அனுமதி பெறாமலே இவர்கள் வைத்துள்ள விஷயம்.

சேனல் தரப்பில் மென்மையாகத் தெரிவிக்க பட்டபோது, மிக நாகரீகமாக விஜய் டிவியும் ரஜினி படத்தை அகற்றிவிட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X