ஏம்மா சாக்ஷி.. முதல்ல கவின ஆட்டையப்போட்ட! இப்போ எதுக்கு இந்த வேலை?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி தற்போது முகெனுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி, முதலில் கவினை காதலித்தார். அபிராமி கவினை காதலிப்பதாக கூறியும் சாக்ஷி கவினுடன் நெருக்கமாக பழகினார்.
இருவரும் ஒரு கட்டத்தில் காதலை பரிமாறிக்கொண்டனர். நன்றாக போய்க் கொண்டிருந்தது இவர்களின் காதல் வாழ்க்கை. தனது தோழி காதலிக்கிறார் என்று தெரிந்தும் கவினை காதலித்த சாக்ஷியை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர்.

நெருக்கமான லாஸ்லியா
ஆனால் அவர்களின் காதல் வாழ்க்கையில் லாஸ்லியா ரூபத்தில் விளையாடியது கர்மா. சாக்ஷியை கவின் காதலிக்கிறார் என்று தெரிந்தும் லாஸ்லியா கவினிடம் நெருக்கம் காட்டினார்.

டீசன்ட்டாக ஒதுங்கிய அபி
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் சாக்ஷி. இந்த பஞ்சாயத்தே இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் கவினை முதலில் காதலித்த அபிராமி, கவினும் சாக்ஷியும் காதலிப்பதாக தெரிந்ததும் அதை பெரிதுபடுத்தாமல் டீசன்ட்டாக ஒதுங்கிக்கொண்டார்.

முகெனை காதலிக்கும் அபி
இதைத்தொடர்ந்து அபிராமி, முகெனிடம் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்துக்கு மேல் அபிராமி முகெனை காதலிக்க தொடங்கிவிட்டார். அபிராமியின் காதலை முகென் ஏற்கவில்லை. தனக்கு வெளியில் கெர்ள் ஃபிரன்ட் இருப்பதாக கூறியும் முகெனை ஒரு தலையாக காதலித்து வருகிறார் அபிராமி.

அபிராமிக்கு பிடிக்கவில்லை
இந்நிலையில் கவினுடனான காதல் முறிந்த நிலையில் சாக்ஷி முகெனிடம் மீண்டும் நெருக்கம் காட்டியுள்ளார். இது கொஞ்சமும் அபிராமிக்கு பிடிக்கவில்லை. முகென் மீது ஓவர் பொஸஸ்ஸிவ்வாக உள்ளார் அபிராமி.

குடியை கெடுக்கும் சாக்ஷி
கவினை பிரித்தது போல் முகெனையும் தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் சாக்ஷி என்று பயப்படுகிறார் அபிராமி. ஒரு முறை அபிராமியின் காதலை தட்டிப்பறித்த சாக்ஷி, தற்போது தனக்கு ஆள் இல்லை என்றதும் முகெனுடன் நெருக்கமாக பழகுவது ஏன் என்றும், சாக்ஷி அடுத்த குடியை கெடுக்க தயாராகிவிட்டார் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

தப்பிக்க வழி
மொத்தத்தில் சாக்ஷியும் ஒழுங்கில்லை, அபிராமியும் ஒழுங்கில்லை. இருவரும் வந்த வேலையை விட்டுவிட்டு காதல் கத்தரிக்காய் என்றே சுற்றி வருகின்றனர். இரண்டு பேருமே தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வந்த வேலையை பார்க்கலாம் என்பதே. நாமினேஷனில் இருந்து தப்பிக்க சாக்ஷி இப்படி வான்ட்டடாக பிரச்சனையை உருவாக்குவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











