இதுக்குல்லாம் கமல் ஃபீல் பண்ண மாட்டாரு.. விஷயமே வேற! சரவணனை அனுப்பியது குறித்து நடிகர் கூறிய உண்மை!

Recommended Video

நடிகர் சரவணனின் குணம் பற்றி இயக்குநர் ரமேஷ்கண்ணா - வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் அண்மையில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். தனது கல்லூரி காலத்தில் பெண்களை பேருந்தில் உரசியதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கமல் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சரவணன். ஆனாலும் இரண்டு வாரங்கள் கழித்து பேருந்து விவகாரம் தொடர்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் எவ்வளவோ விஷயங்கள் நடைபெறுகிறது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எப்போதோ இளவயதில் நடந்ததை கூறியதற்காக வெளியேற்றுவதா என கொந்தளித்தனர்.

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன்

சிலர் கமலை கோர்த்துவிடுறான் என சரவணன் ஒருமையில் பேசியதற்காகவே வெளியேற்றப்பட்டார் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

சேரனை பேசியது தவறு

சேரனை பேசியது தவறு

அதில் சரவணனை வெளியேற்றிதற்கு காரணமே வேறு என அவர் கூறியுள்ளார். சரவணன், சேரனை மரியாதைக் குறைவாக பேசினார். இதன் காரணமாகதான் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். சேரனை சரவணன் நீ போ என்று பேசியது தவறு என்றும் கூறினார்.

அதுதான் காரணம்

அதுதான் காரணம்

சரவணன் சேரனை தவறாக பேசியதற்கு இயக்குநர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். பலர் பகிரங்கமாக அறிக்கை விட்டனர் என்றும் சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று சேரனை மீட்டு வருவோம் என்றும் கூறினர் என்ற பயில்வான் அந்த காரணத்திற்காகதான் சரவணன் வெளியேற்றப்பட்டார்.

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்

ஒருமையில் பேசுவதற்கெல்லாம் கமல்ஹாசன் ஃபீல் பண்ண மாட்டார் என்ற அவர், பேருந்தில் பெண்களை உரசியதாக கூறப்பட்டதற்காக அவர் வெளியேற்றப்படவில்லை. சேரனிடம் சண்டை போட்டது மட்டுமே காரணம் என்றும் சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது காலத்தின் கட்டாயம், அது ஒரு நிர்பந்தம் என்றும் என்றும் கூறினார் பயில்வான் ரங்கநாதன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X