சரவணன் வெளியேற்றப்பட்டது ஏன்? ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சொல்வாரா கமல்?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Shocking about Saravanan : சரவணன் பற்றிய அதிர்ச்சி தகவல்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் குறித்து ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்றாவது தெரிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டார் சரவணன். தனது கல்லூரி நாட்களின் போது பேருந்தில் பெண்களை உரசியதாக எப்போதோ நடந்த சம்பவத்தை கமலின் முன்பு கூறினார் சரவணன்.

இதற்கு எதிர்ப்பு எழவும் தனது பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சரவணன். ஆனாலும் சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

பெரும் தாக்கம்

பெரும் தாக்கம்

ஹவுஸ்மேட்ஸ்களை கண்டு சொல்லிவிட்டு செல்லக்கூட பிக்பாஸ் அவரை அனுமதிக்கவில்லை. இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சொல்ல முடியாத காரணங்கள்

சொல்ல முடியாத காரணங்கள்

பின்னர் சரவணன் எங்கே எங்கே என ஹவுஸ்மேட்ஸ்கள் தேட தொடங்கியதும், சரவணன் சில சொல்ல முடியாத காரணங்களுக்காக வெளியேற்றப்பட்ட விஷயத்தை தெரிவித்தார் பிக்பாஸ்.

பதறிய ஹவுஸ்மேட்ஸ்

பதறிய ஹவுஸ்மேட்ஸ்

இதனால் ஹவுஸ்மேட்ஸ்கள் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து சரவணன் வீட்டில் யாருக்கு என்ன ஆனதோ என பதறினர் ஹவுஸ்மேட்ஸ்கள்.

சனிக்கிழமை தெரியும்

சனிக்கிழமை தெரியும்

இதனை கவனித்த பிக்பாஸ், சரவணன் வீட்டில் எல்லோரும் நல்லாதான் இருக்காங்க, சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் சனிக்கிழமை தெரிவிக்கப்படும் என்றார்.

உண்மையான காரணம்?

உண்மையான காரணம்?

இதனால் சனிக்கிழமையான இன்று கமல் மூலமாக பிக்பாஸ், சரவணனை வெளியேற்றப்பட்ட காரணத்தை சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சரவணனிடம் கூறிய அதே காரணத்தைதான் ஹவுஸ்மேட்ஸ்களிடம் சொல்வார்களா? அல்லது வேறு ஏதேனும் உண்மையான காரணத்தை சொல்வார்களா என்பது இன்று தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X