செம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா? இவர் ஏன் இப்படி....?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் கிராமத்து குல சாமி கோயிலுக்கு செம்பா வரக்கூடாதுன்னு சாமியார் சொன்னதா பெரியய்யா பொய் சொல்லி இருக்கார்.
செம்பா அப்பாவும், பெரியய்யாவும் கிராமத்து நண்பர்கள்.. செம்பா பெரியய்யா வீட்டுக்கு வேலைக்காரியா வந்தவ.
செம்பாவின் அப்பா இப்போது உயிரோட இல்லை. நாளடைவில் செம்பா பெரியய்யா வீட்டு மருமகளாகிட்டா.

வேண்டாம் செம்பா
குல சாமி கோயிலுக்கு செம்பாவை அழைச்சுட்டு வரவேணாம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு மனைவியோட தன் சொந்த கிராமத்துக்கு போயிடறார் பெரியய்யா. ஆனா, கார்த்திக்கும், வினோதினியும் செம்பாவின் கிராமத்து கனவுகளை பார்த்து அவளை அழைச்சுட்டு வந்துடறாங்க.

செம்பாவை கண்ட
செம்பாவைப் பார்த்ததும் பெரியய்யாவின் முகம் மாறிடுது. கார்த்திக் அப்பாவை சமாதானப் படுத்த அவர் சமாதானம் ஆகவில்லை. அப்படி என்னதான்ப்பா சொன்னார் சாமியார்னு கேட்டா.. சொல்லாம நிக்கறார்.

சாமியார் சொன்னது
மனசுக்குள்ள சாமியார் சொன்னது அப்படியே ஓடுது... இவர்தான் சாமியார்கிட்ட கேட்கறார் கிராமத்துக்கு செம்பாவையும் அழைச்சுட்டு போகணுமான்னு. சாமியார் கட்டாயம் செம்பா உங்க வீட்டு மகாலட்சுமி .அவளில்லாமல் நீங்க கிராமத்துக்கு போகவே கூடாதுன்னு சாமியார் சொல்றார்.

இவரிடம் ரகசியம்
பெரியய்யாகிட்ட என்னவோ ரகசியம் இருக்கு. கிராமத்து வீட்டிலிருக்கும் பெரியய்யாவிடம் மனைவி ஒரு போட்டோவை காமிக்கறார்.அதில் இவருடன் செம்பாவின் அப்பாவும் இருக்கார். இந்த போட்டோவை, செம்பாவிடம் இப்போது காமிக்க வேணாம்னு மனைவியை எச்சரிக்கிறார்.
அதனால பெரியய்யாகிட்ட ஏதோ ரகசியமிருக்கு... போகப்போக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











