தேவராஜ் வீட்டில் இதுக்குத்தான் பெரிய தடுப்பு சுவரா...?
சென்னை: சன் டிவி கிழக்கு வாசல் சீரியலில் தேவராஜ் வீடு ரெண்டு பாகமா இருக்கு. பெரிய வீட்டின் நடுவில் பெரிய தடுப்பு சுவர்.
தேவராஜ் நாகப்பன் ரெண்டு பேரும் கிழக்கு வாசல் கிராமத்தின் பெரும் தலைகள். ரெண்டு பேருக்குள்ளும் ஏதோ தீராத பகை இருக்கு.
பகைன்னா சாதாரண பகை இல்லை... வெட்டு குத்து கொலை நடக்கும் அளவுக்கு பகை.

அண்ணன் தேவராஜ்
தேவராஜ் தங்கச்சி பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்ததை நாகப்பன் கெடுத்துடறார். மாப்பிள்ளையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்படி செய்துட மாப்பிள்ளை வீட்டார் தெறிச்சு ஓடிடறாங்க.

தங்கை பொண்ணுக்கு
தேவராஜ் ஆளுங்க இதுக்காக நாகப்பனை பழிவாங்க துடிக்க பேசாம இருங்கடா... படகுப் போட்டி வருது..அப்போ அவனை பார்த்துக்கலாம்னு அமைதிப்படுத்தி வைக்கறார். தங்கை பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போனதில் தேவராஜின் தங்கை வருத்தத்தில் இருக்காங்க.

பையனுக்கு
உங்க தங்கச்சி பொண்ணுக்கு வெளியில மாப்பிள்ளை பார்க்கத்தானே பிரச்சனை.. பேசாம நம்ம பெரிய பையனுக்கேன்னு மனைவி இழுக்க.. நிறுத்துன்னு கத்தறார் தேவராஜ்.

தங்கச்சியை
தங்கச்சி புருஷன் சொல்லிட்டு செத்து போன வார்த்தையை மறந்துட்டியா.. என் பொண்ணை வளர்த்து உங்க பையனுக்கு கல்யாணம் செய்து வைக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்னு சொன்னார். என் தங்கச்சிகூட பேச்சு வார்த்தை வச்சுக்கக் கூடாதுன்னு சொன்னார்.

தடுப்பு சுவர்
அதுக்குத்தான் இந்த வீட்டைரெண்டா பிரிச்சு நடுவுல தடுப்பு சுபர் கட்டினோம். என் தங்கச்சி முகத்தை கூட பார்த்து பல வருஷமாச்சு. நம்ம பையனுக்கு அவர் பொண்ணை கட்டி வைக்கக் கூடாதுன்னுதானே அவர் எண்ணம்.. அதை எப்படி நாம மீற முடியும்னு தேவராஜ் சொல்ல,தங்கச்சி அழுதுகிட்டே அண்ணனை ஜன்னல் வழியா பார்க்கறாங்க.
அம்மாடி இவ்ளோ பெரிய வீட்டுக்குள்ள தடுப்பு சுவர் எதுக்குன்னு இப்போ தெரிஞ்சு போச்சு.


Click it and Unblock the Notifications











