Kanmani Serial: ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களைப் பெத்தும் இப்படியா?
சென்னை:சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணனுக்கு நிறைய சோதனைகள் வருது. அது மட்டும்தான் கதைக்கு முக்கியமான போக்கா இருக்கு.
சவுந்தர்யாவுக்கு கரண்ட் ஷாக் அடிச்சு அவ கோமா நிலையில் இருக்கா. அவ உயிர் பிழைக்கணும்னு பக்கத்து ஊரில் நடக்கும் அம்மன் கோயில் திருவிழாவில், கலந்துக்கிட்டு அம்மனுக்கு காப்புக் கட்டி, கடுமையான விரதமிருப்பதா நேந்துக்கறான்.
அதே மாதிரி காப்பு கட்டிய பின்னர் மூணு நாளைக்கு இந்த ஊரை விட்டு போகக் கூடாதுன்னும் பூசாரி சொல்லிடறார்.

ஷாக் சவுந்தர்யாவுக்கு
மாயன் முத்துசெல்விக்கு கரண்ட் ஷாக் மோட்டார் பம்ப் செட்டில் செட் பண்ண அதில், சவுந்தர்யா மாட்டிக்கறா.கரண்ட் ஷாக் சவுந்தர்யாவை தூக்கி அடிச்சதில் உயிருக்கு ஆபத்தான நிலையில சவுந்தர்யா ஆஸ்பத்திரியில் இருக்கா. உயிரே போக இருந்த அவளுக்கு கண்ணன் அழுதுகிட்டே நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டதும் உயிர் வந்துருது. இதை பார்த்த முத்துச்செல்வி அதிர்ச்சி ஆகிடறா.

குடும்பத்தோட முத்துசெல்வியை
குடும்பத்தோட முத்து செல்வியை வீட்டை விட்டு கண்ணனுக்குத் தெரியாமலே சவுந்தர்யாவின் அக்காக்கள் இருவரும் அனுப்பிடறாங்க. முத்து செல்வியின் வயசான அப்பா கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் லாரி டிரைவரை நம்பி நட்ட நடு ராத்திரியில லாரியில் ஏறி எங்கியாவது போயிடலாம்மான்னு கிளம்பறார். கொஞ்ச தூரத்தில் போனா இவரை விட்டுட்டு இரண்டு பெண்களை லாரிக்காரன் கடத்திகிட்டு போயிடறான்.

ஹோட்டலில் ஒருத்தன்
பெண்கள் காணாமல் போன சோகத்தில் முத்துசெல்வியின் அப்பா சாப்பிடாமல் மயக்கம் போட்டு விழப்போக, ஹோட்டல்காரர் ஒருவர் ரெண்டு இட்லி சாப்பிடுப்பான்னு கூப்பிடறார். அவரும் சாப்பிட உட்கார...அங்கே சாப்பிட்டுக்கிட்டு இருந்த ஒருத்தன்,ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களைப் பெத்து இருக்கானே பெரிய மனுஷன். அவங்களை அழைச்சுக்கிட்டு நடு ராத்திரியில அதுவும் லாரிக்காரன் கூட அனுப்பி வச்சு இருக்கானே இவன் எல்லாம் ஒரு அப்பனான்னு கேட்கறான்.

வைக்கலைங்க ஐயா
நான் அனுப்பி வைக்கலீங்க...நம்பி ஏறிப் போனேங்கன்னு சொல்றார்.என்னையா நாட்டு நடப்பு உனக்கு தெரியாது...இப்படியே ஒண்ணும் தெரியாதவன் மாதிரி வேஷம் போட்டுத்தான் தர்மதுரை ஐயா வீட்டு சம்பந்தம் கிடைச்ச உடனே சம்மதம் சொல்லி தலையாட்டுனியா? அப்பவே யோசிக்க வேணாம்...எப்பவுமே விரலுக்கு ஏத்த வீக்கம்தான்யா இருக்கணும்னு சொல்ல, முத்துச்செல்வி அப்பா சாப்பிடாம எழுந்து போறார்.
உண்மையில் பொம்பளைப் பிள்ளைங்களை பெத்தவங்க இந்த காலத்துல எல்லா விஷயத்திலும் கவனமா இருக்கணும்னுதான் இந்த காட்சி உணர்த்துது.


Click it and Unblock the Notifications











