ரெண்டு பொண்ணுங்களை வச்சுக்கிட்டு... அப்பா வீரையன் முட்டாளா...?
சென்னை:சன் டிவியின் கண்மணி சீரியலில் வயசு பொண்ணு ஒண்ணு, சிறுமி ஒருத்தின்னு ரெண்டு பொண்ணுங்களை ராத்திரி நேரத்துல முன்ன பின்ன தெரியாத லாரியில அழைச்சுகிட்டு போறார். அப்பா வீரய்யா.
கிராமத்துல என்னதான் மக்கள் வெள்ளந்தியா இருந்தாலும்... பெண்ணைப் பெத்துட்டு அவங்க பாதுகாப்பு விஷயத்துல இவ்ளோ அஜாக்கிரதையா இருக்க மாட்டாங்க.
சவுந்தர்யாவுக்கு கரண்ட் ஷாக் அடிக்க முத்துச்செல்வி குடும்பம்தான் காரணம்னு, ராஜசேகர் பொண்ணுங்களும், மாப்பிளைங்களும் முத்துச்செல்வி குடும்பத்தை வீட்டை விட்டு துரத்தறாங்க.

வீட்டைவிட்டு வெளியில்
ராத்திரி நேரத்துல வீட்டை விட்டு துரத்திட்டா அங்க இங்க படுத்து இருந்துட்டு, விடிஞ்சதும் பொண்ணுங்களை பொறுப்புள்ள அப்பான்னு ஊருக்கு அழைச்சுட்டு போகாம.. ராத்திரியோட ராத்திரியா தெரியாத லாரி டிரைவரை நம்பி லாரியில் ஊருக்கு அழைச்சுட்டு போறார்.

இவரை இறங்க சொல்லி
வீரய்யனை லாரியில் இருந்து இறங்கி தண்ணீர் கொண்டு வர சொல்றாங்க.இவரும் அப்பாவியாச்சே... பொண்ணுங்களை விட்டுட்டு தண்ணீர் எடுக்கப் போறாரு. மத்த நேரத்துல வாய் கிழியும்.. தத்துவம் உதிரும்...இப்படியும் ஒரு அப்பா.

வீரையன் முட்டாள்
முட்டாள் அப்பன் வீரய்யனை நம்பி போன பெத்த பொண்ணுங்க ரெண்டு பேரையும் லாரிக்காரன் கடத்திகிட்டு போயிடறான். அப்போதுதான் ராஜசேகருக்கு இவங்களை வெளியில அனுப்பின விஷயம் தெரியுது. அவரிடம் லாரிக்காரன் பொண்ணுங்களை கடத்திகிட்டு போன விஷத்தை வீரையன் அழுதுகிட்டே சொல்றார்.

அறிவுரை போலீஸ்
போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் குடுக்க போறாங்க. அங்க போலீஸ் திட்டறார்... என்னயா நீ வயசுப் பொண்ணை வச்சுக்கிட்டு, முன்ன பின்ன தெரியாத லாரிக்காரன் லாரியில் ஏறி போயிருக்க... ரெண்டு பொண்ணை பெத்து வச்சிருக்கோமேன்னு ஜாக்கிரதையா இருக்க வேணாம்.. பொண்ணு8ங்களை லாரியில் விட்டுட்டு கீழ நீ எதுக்குயா இறங்குனேன்னு நல்லா டோஸ் விடறார்.
இப்படிப்பட்ட பொறுப்பில்லாத அப்பாவுக்கு பொண்ணுங்க பிறக்க கூடாது.


Click it and Unblock the Notifications











