Vanakkam thamizha programme: நாயகி அனன்யாவை அப்படியா திட்டினீங்க?

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் அனன்யாவாக நடிக்கும் சுஷ்மா, சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நல்ல அழகான பெண்,இவருக்கு தமிழ் உட்பட ஏழு மொழிகள் தெரியுமாம்.

நாயகி சீரியலில் இரண்டு பெண்கள் அனன்யாவாக நடித்து, பின்னர் பாதியில் ஒதுங்கிக் கொண்டனர். மூன்றாவதாக அந்த கேரக்டருக்கு நடிக்க வந்தவர்தான் இந்த சுஷ்மா . குட்டியாக இருந்தாலும், நல்ல அழகுப் பெண்.

பணக்கார பெண் கதாபாத்திரம் என்பதாலோ என்னவோ, அனன்யா சீரியலில் போட்டு வரும் அத்தனை உடைகளும் அம்சமாக இருக்கும். உதடுகளில் லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் என்று சொல்ல முடியாதபடி உதடுக்கள் பூச்சில் கவர் செய்யப்பட்டு இருக்கும்.இதுவும் இவருக்கு கை வந்த கலை.

 அனன்யா திரு

அனன்யா திரு

சின்ன வயசில் இருந்தே திரு மீது அனன்யாவுக்கு காதல். ஆனால், இந்த காதலை நடுவில் வீட்டு வேலைக்காரியா வந்த ஆனந்தி தட்டிப் பறித்து விடுவது போல, திருவுக்கு ஆனந்தி மேலயும், ஆனந்திக்கு திரு மேலயும் காதல் வந்துருது. அன்று ஆரம்பிக்கிறது அனன்யாவுக்கு திருவை தன் வசம் மீட்கும் போராட்டம். இந்த போராட்டம் அவளை கொடுமையான வில்லியாக வெவ்வேறு பரிமாணத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

 நடிக்கும்போது வில்லி

நடிக்கும்போது வில்லி

இவ்ளோ அழகா இருக்கீங்க,எப்படி வில்லியாக பெயரும் புகழும் எடுக்க நேர்ந்தது என்று கேட்டால், நடிக்க வந்தாச்சு...வில்லியா மட்டும் என்ன நடிக்க முடியாதான்னு ஒரு சவாலா எடுத்துகிட்டு நடித்தேன். முதலில் சுமங்கலி சீரியல் மூலம்தான் அறிமுகம் ஆனேன்.பிறகு வந்ததுதான் இந்த வாய்ப்பு. ரிகர்சல் பண்ணும் போது ரொம்ப ஜாலியா திருவை கலாய்க்கற மாதிரிதான் ரிகர்சல் பண்ணுவேன்.டேக்குன்னு வந்துட்டா, வில்லியா மாறி நடிக்க ஆரம்பிச்சுருவேன்னு சொன்னார்.

 எப்படி வரவேற்பு

எப்படி வரவேற்பு

நாயகி சீரியலில் வில்லியாக நடிக்கிறீர்கள். வெளியில் போகும்போது உங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, அனன்யான்னு கூப்பிட்டு ஆசையா பேசுவாங்க. வில்லியா பிச்சு உதறுகிறீங்கன்னு பாராட்டுவாங்கன்னு சொன்னார். வில்லியா நடிச்சதுக்கே பாராட்டறாங்கன்னு எனக்கே சந்தோசம் வந்துரும்னு சொன்னார். நானும், திருவின் அம்மாவா நடிக்கற சேச்சியும் படத்துக்கு போயிருந்தோம். அப்போ இன்ஸ்ட்டா கிராமில் அப்டேட் போட்டு இருந்தோம். வெளியில் பார்த்தால் எங்களைப் பார்க்க அவ்ளோ பேர் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

 வில்லியா திட்டுவாங்க.

வில்லியா திட்டுவாங்க.

ஒரு முறை வீட்டில் வேலைப் பார்க்கும் வேலைக்காரி ஆனந்திக்கு உளவு சொல்லிட்டான்னு சொல்லி அவளை அடிச்சுருவேன்.அந்த சமயம் என்னை பார்த்த சீரியல் ரசிகைகள்,எவ்ளோ திமிர் இருந்தா வேலைக்காரியை அடிப்பே.அந்த ரைட்ஸ் உனக்கு யார் குடுத்ததுன்னு என்னை கேரக்டரா பார்த்து கோவமா கேட்பாங்க. நானும் கேரக்டராவே மாறி,பின்னே எங்க வீட்டில் நாங்க பேசிக்கறதை ஒட்டு கேட்டு வெளியில சொல்றது தப்பில்லையான்னு கேட்பேன்.அவங்க பாணிக்கே நானும் போயிருவேன்னு சொன்னார்.

புத்திசாலிப் பெண்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X