அடுத்து இந்தியில் இருந்து அந்த கசமுசா காட்சியை காப்பியடிப்பாரா பிக் பாஸ்?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக இந்தியில் இருந்து காப்பியடித்து கசமுசா காட்சிகளையும் காட்டுவார்களா?
இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதை பார்த்து தமிழில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்தி நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகளை காப்பியடித்து தமிழிலும் வைத்தார்கள்.
ஆரவ் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்தது அப்போது பெரிய விஷயமாக இருந்தது.

மகத்
2வது சீசனில் பிக் பாஸ் வீட்டின் பிளேபாயாக உள்ளார் மகத். யாஷிகாவிடம் முத்தம் கேட்பதும், கட்டிப் பிடிப்பதும் என்று ஒரே லூட்டியடிக்கிறார். அவரின் லீலைகளை பார்த்த பார்வையாளர்களுக்கு ஆரவின் மருத்துவ முத்தம் சப்பையாகிவிட்டது.

ஐஸ்வர்யா
பிக் பாஸ் வீடு என்றாலே ஒரு காதல் ஜோடியை உருவாக்கியே தீர வேண்டும் போல. இந்த சீசனில் ஷாரிக், ஐஸ்வர்யா தான் அந்த காதல் ஜோடி. இரவு நேரத்தில் ஷாரிக் ஐஸ்வர்யாவுடன் வந்து ஒரே பெட்டில் படுக்கிறார்.

கூச்சம்
சக போட்டியாளர்கள் இருக்கிறார்கள், கேமராக்கள் மூலம் தனது பெற்றோர் உள்பட ஊர், உலகமே பார்க்கிறது என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ஐஸ்வர்யாவின் படுக்கையில் படுக்கிறார் ஷாரிக்.

கடலை
ஐஸ்வர்யாவோ ஷாரிக்குடன் ஜாலியாக கடலை போட்டுக் கொண்டு தன்னை யாரும் தவறாக பேசிவிடக் கூடாது என்பதற்காக மும்தாஜிடம் போய் ஷாரிக் வந்து தனது பெட்டில் படுப்பது பிடிக்காதது போன்று சீன் போடுகிறார்.

கசமுசா
இந்தி பிக் பாஸ் வீட்டில் பிரபல நடிகையின் தங்கையும், நடிகர் ஒருவரும் இரவு நேரத்தில் சக போட்டியாளர்கள் தூங்கிய பிறகு படுத்துக் கொண்டு முத்தமிட்டனர். அடுத்து அதையும் காப்பியடித்து தமிழிலும் காட்டுவார்களோ?

கலாச்சாரம்
ஏற்கனவே ஷாரிக்-ஐஸ்வர்யா, மகத்-யாஷிகா செய்வதை எல்லாம் பார்த்து பார்வையாளர்கள் என்ன கருமம்டா நடக்கிறது. கலாச்சாரத்தை நாசமாக்குகிறார்கள் என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ்: வீக் என்ட் வருகிறது, எந்த போட்டியாளரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications











